MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை 'இப்படி' குடிங்க.. எண்டிங்கில்லாத நன்மைகள்!! 

தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை 'இப்படி' குடிங்க.. எண்டிங்கில்லாத நன்மைகள்!! 

Coconut Oil Health Benefits : தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும். அவை குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 14 2024, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Coconut Oil Health Benefits In Tamil

Coconut Oil Health Benefits In Tamil

தேங்காய் எண்ணெய் தலைமுடிகளுக்கு மட்டுமின்றி உடலுக்கும் இந்த எண்ணெய் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆயுர் வேதத்தில், தென்னை மரத்தை "கல்ப விருக்ஷா" என்கிறார்கள். இதற்கு வாழ தேவையான எல்லாவற்றையும் தரும் மரம் என பொருள். தேங்காய் எண்ணெய் சுவை நன்றாக இருக்கும். குளிர்ச்சியானதும் கூட.

இதுமட்டுமின்றி காலையில் குடிக்க வேண்டிய ஆரோக்கிய டானிக் என்றும் சொல்லலாம். தினமும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இங்கு காணலாம்.  

25
Coconut Oil Health Benefits In Tamil

Coconut Oil Health Benefits In Tamil

மனநிலை மேம்பாடு:  

தேங்காய் எண்ணெயை காலையில் எடுத்து கொள்பவர்கள் நிதானமாகவும், பதற்றம் குறைவாகவும் இருப்பார்கள்.  இதில் பல்வேறு நரம்பியல் நன்மைகள் உள்ளன. தேங்காய் எண்ணெயில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் உங்களுடைய மனநிலையை மாற்றும்.  இதனால் நிம்மதியான உணர்வு ஏற்படும். 

புத்துணர்வு: 

மற்ற எண்ணெய்களை போல கொழுப்புகளுடன் கனமான உணர்வை தராமல் ஆற்றல் அளவை அதிகரிக்க இந்த எண்ணெய் உதவுகிறது. காலையில் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்பவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நாள் முழுவதும் நீடித்த ஆற்றலோடு இருக்க உதவுகிறது. 

35
Coconut Oil Health Benefits In Tamil

Coconut Oil Health Benefits In Tamil

ஹார்மோன்கள் சமநிலை: 

தேங்காய் எண்ணெய் உற்சாகமாக இருக்க ஆற்றலை தருகிறது.  சீரற்ற தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும். உடலில் வளர்சிதை மாற்றத்தை  மேம்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தனித்துவமான பண்புகளை உடையவை. இதன் காரணமாக செரிமானம் பிரச்சனை இருக்காது.  இவை விரைவில் ஆற்றலாக மாற்றப்படும்.  நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும்.

சரும பராமரிப்பு: 

உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.  சேதமடைந்த சருமத்தை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் ஆயுர்வேத மசாஜ்களில் இதை பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயில் உள்ள சில பண்புகள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. 

இதையும் படிங்க:  Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய  தேங்காய் எண்ணெயுடன் 'இத'  கலந்து முகத்தில் தடவினால் போதும்!

45
Coconut Oil Health Benefits In Tamil

Coconut Oil Health Benefits In Tamil

நோய் எதிர்ப்பு:  

தேங்காய் எண்ணெயில் உள்ள ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல் பண்புகள் நோய்களை எதிர்க்க உதவுகிறது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவும். வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும். தினமும் காலையில் ஆயில் புல்லிங்கிற்கு செய்ய இந்த எண்ணெயினை பயன்படுத்தலாம். வாய் சுகாதாரம் தான் நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது. 

ஆயில் புல்லிங்; 

தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து விட்டு துப்பவும். இப்படி செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறும்.  இந்த ஆயில் புல்லிங் பற்களில் உள்ள தேவையில்லாத அழுக்குகளை நீக்கிவிடும். 

55
Coconut Oil Health Benefits In Tamil

Coconut Oil Health Benefits In Tamil

எப்படி குடிக்கலாம்? 

தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கல்லீரலும், குடலும் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மிதமான சூடுள்ள நீரில் தேங்காய் எண்ணெயை கலந்து குடிக்கலாம்.  இப்படி நாள்தோறும் காலையில்  தேங்காய் எண்ணெய் வெந்நீருடன் குடிப்பதால் குடித்தால் உடல் எடை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. 

தேங்காய் எண்ணெயின் நன்மைகளை பெற தினமும் 1 ஸ்பூன் எண்ணெயை குடிக்கலாம்.

இதையும் படிங்க:  1 சொட்டு தோங்காய் எண்ணெயை உடலில் இந்த 3 இடத்தில் விடுங்க.. அதிசயத்தை பாருங்க..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved