
பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது குழந்தை ஒழுக்கமுள்ளவர்களாக வளர வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் பல விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படி சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள் பிள்ளைகள் தங்களது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பார்கள். இதனால் அவர்களது எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.
இருப்பினும் சில குழந்தைகள் வளர வளர பெட்ரோல் செல்வதை கேட்காமல் தங்களது இஷ்டப்படி வளருவார்கள். இப்படி வளரும் குழந்தையை பார்க்கும் போது அவர்களது வாழ்வில் ஒழுக்கம் இல்லை என்பதை தெளிவாக காட்டும். இதற்கு குழந்தைகள் சரியான சூழ்நிலைகளில் தான் இருக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். சொல்ல போனால் அது அவர்களது பொறுப்பு. இது தவிர தங்களது குழந்தை மதிப்பு மிக்க விஷயங்களை கற்றுக் கொள்கிறார்களா.. இல்லையா? என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு பெற்றரும் தங்களது குழந்தை மற்றவர்களின் நன்றாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உங்களது குழந்தை ஒழுக்கமுள்ளவரா.. இல்லையா என்பதை காட்டும் சில அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: உங்க குழந்தைக்கு '3' வயசு ஆச்சா?அப்போ கண்டிப்பா இந்த '6' பழக்கங்களை சொல்லிக் கொடுங்க!!
'இல்லை' என்று சொல்லாதீர்கள்:
உங்கள் குழந்தை உங்களிடம் ஏதாவது கேட்டால் இல்லை என்று நேரடியாக சொல்லாதீர்கள். இல்லையெனில், உங்களுக்கு குழந்தை அழ ஆரம்பித்து விடுவார்கள் அல்லது கோபப்படுவார்கள். எனவே அவருக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் விதமாக, அவர்கள் கேட்கும் விஷயத்தில் எந்த பயனுமில்லை என்று எடுத்துச் சொல்லுங்கள். நல்ல விஷயத்தை குழந்தைக்கு தெரியப்படுத்துவது போன்ற பிற முறைகளில் நீங்கள் பின்பற்றுங்கள்.
கோப மனப்பான்மை:
உங்கள் குழந்தை சின்ன சின்ன விஷயத்திற்கு கூட கோபப்படுகிறார்களா? ஆம், என்றால் உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்பிப்பது மிகவும் அவசியம். குழந்தைகளிடம் அன்பும் அனுதாபமும் குறைவு. இத்தகைய சூழ்நிலையில், அவற்றை மேம்படுத்த அவர்கள் செய்த விஷயங்களுக்கு வெகுமதி அளித்து அவர்களை பாராட்டுங்கள். மேலும் கோபம் எவ்வளவு தீங்கு என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
பிறரை துன்புறுத்துதல்:
உங்கள் பிள்ளை பிற குழந்தை காயப்படுத்தி விட்டாலோ அல்லது பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டாலோ, அது குறித்து அவர்கள் ஒருபோதும் மனம் வருந்தவில்லை என்றால் கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் பிறருக்கு என்ன செய்கிறார்களோ, அவர்களுக்கு நடந்தால் அவர்கள் எப்படி உணர்வார்கள் என்று சொல்லிக் கொடுங்கள்.
மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது:
நீங்கள் உங்கள் குழந்தையை திட்டினாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அதையே செய்தால் கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்கள் செய்த தவறுக்கு திட்டுவதற்கு பதிலாக, அதனால் ஏற்படும் விளைவு என்ன என்பதை அன்பாக எடுத்துச் சொல்லுங்கள்.
பொய் சொன்னால்:
உங்கள் குழந்தை தான் செய்த தவறை ஒத்துக் கொள்ளவில்லை என்றாலோ அதற்கு பதிலாக பொய் சொல்வது அல்லது மற்றவர்களை குறை கூறும் பழக்கம் இருந்தால் அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். தான் செய்த தவறை மற்றவர்கள் மீது பழி போடாமல் இருக்க உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். மேலும் அவர்கள் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்த பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்!