Spiti Valley
பயணம் செய்வது அன்றாட வேளைப்பளுவையும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. ஆகையால் இந்தியாவில் இப்போது மக்கள் பயணம் செய்வது அதிகரித்து விட்டது. கடற்கரைகள், மலைபிரதேசங்கள், அருவிகள் என தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். இதில் சிலர் ஆள் அரமில்லாத தனிமையான சுற்றுலா இடங்களை மிகவும் விரும்புவார்கள். அதாவது நகர நெருக்கடி இல்லாமல், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள். இத்தகைய தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற 5 இடங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
Himachal Pradesh Tourist Places
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு (இமாச்சலப் பிரதேசம்)
நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விலகி அமைதியை விரும்புவோருக்கு ஸ்பிட்டி ஒரு சிறந்த இடம். அமைதியான அழகு மற்றும் மாறுபட்ட நிலப்பரப்புடன், இந்த இடம் உயரமான குளிர்ந்த பாலைவன நிலப்பரப்பில் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குகிறது. 'லிட்டில் திபெத்' என்று அழைக்கப்படும் இந்த பகுதி, மலைகள் மற்றும் படிக-தெளிவான ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. நீண்ட காலம் குளிராக இருக்கும் இந்த பகுதி கோடையை சமாளிக்க ஏற்ற இடமாகும். பழங்கால மடங்கள், காசா மற்றும் டாபோ போன்ற தொலைதூர கிராமங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவுகள் ஸ்பிட்டியின் அழகை மெருகூட்டுகின்றன.
Ziro Valley
ஜிரோ பள்ளத்தாக்கு (அருணாச்சலப் பிரதேசம்)
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் நெல் வயல்கள் மற்றும் பாரம்பரிய அபதானி பழங்குடி கிராமங்கள் உள்ளன. நகர வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், நெல் வயல்கள், அழமான மலைகள் மற்றும் ஏராளமான இயற்கையுடன் கூடிய பசுமையான சொர்க்கத்தை உங்களுக்கு வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க விரும்புவோருக்கும், அழகிய நடைப்பயணங்களையும் மெதுவான வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவோருக்கும் இந்த இடம் சரியானது.
கி.மீ.க்கு வெறும் 68 பைசா! இந்தியாவின் மிக மலிவான ரயில் சேவை இதுதான்!
Nako
நாகோ (இமாச்சலப் பிரதேசம்)
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,600 மீ உயரத்தில் அமைந்துள்ளது நாகோ. நகரத்திலிருந்தும் நெரிசலான சுற்றுலா இடங்களிலிருந்தும் தப்பிக்க விரும்புவோருக்கு உண்மையிலேயே இது ஒரு சிறப்பான இடமாகும். வெள்ளை பனிபோர்த்திய மலைகள், நாகோ ஏரி மற்றும் உள்ளூர் மக்களின் அமைதியான வாழ்க்கை முறை இந்த இடத்தை அமைதியான விடுமுறை இடமாக மாற்றுகிறது. நீங்கள் தனிமையைத் தேடினால் நாகோ உங்களை தேடுகிறது என்று அர்த்தம்.
Agatti Island
அகட்டி தீவு (லட்சத்தீவு)
லட்சத்தீவில் அமைந்துள்ள அகட்டி தீவு தனிமையான தீவு பகுதிகளை விரும்புபவர்களுக்கு சிறந்த இடம். வெள்ளை மணல் கடற்கரைகளில் நடப்பதற்கும், நீல நிற நீரில் நீந்துவதற்கும், துடிப்பான பவளப்பாறைகளை கண்டு ரசிப்பதற்கும் அகட்டி தீவை விட்டால் வேறு இடமில்லை. ஒரு சில விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால் இந்த தீவுக்கு அதிக மக்கள் வருவதில்லை. ஆகவே தனிமையை விரும்புபவர்களுக்கும் ஸ்நோர்கெல்லிங், டைவிங்கை விரும்புபவர்களுக்கும் அகட்டி தீவு தான் பெஸ்ட் சாய்ஸ்.
ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இனி எல்லாமே ஒரே இடத்தில்.. இந்திய ரயில்வேயின் புதிய வசதி!
Mechuka
மெச்சுகா, (அருணாச்சல பிரதேசம்)
இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகிலுள்ள மற்றொரு சிறந்த இடம் மெச்சுகா ஆகும். இந்தியாவின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இது அமைந்துள்ளது. சியோம் நதியால் இந்த பள்ளத்தாக்கு அழகை கூட்டுகிறது. நதியின் பின்னணியில் பனி மூடிய மலைகள், அழகான பசுமையான காடுகள் நிறைந்த மலைகள் உங்களை சொர்கத்திற்கே அழைத்துச் செல்லும்.