வெந்தயம் சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருளாகும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் ஃபோலிக் அமிலம், துத்தநாகம், தாமிரம், கரோட்டின், நியாசின் போன்றவை உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும். இது தவிர இதை பலரும் எடை இழப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள்.
25
Natural remedies for piles in tamil
வெந்தயம் பைல்ஸ் பிரச்சனையையும் சரி செய்யும் தெரியுமா? வெந்தயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதுதவிர, மூல நோயால் ஏற்படும் காயங்களை சரி செய்யவும் இது பயனுள்ளதாக இருக்கும். இப்போது மூலநோய் பிரச்சனையை சரிசெய்ய
வெந்தயம் எப்படி உதவுகிறது மற்றும் அதை சாப்பிடும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பைல்ஸ் என்பது செரிமான கோளாறு காரணமாக ஏற்படும் மிகவும் மோசமான பிரச்சினையாகும். இதுதவிர, அந்த பகுதியில் வீக்கம் கட்டிகள் கூட தோன்றும். சிலசமயங்களில் ரத்தம் கூட வரும். இந்த பிரச்சனை வந்த நபரால் எழுந்து உட்காருவதில் மிகவும் சிரமமாக உணருவார்கள்.
பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து இந்த பிரச்சனையை விரைவில் நீக்க உதவுகிறது. இதற்கு இரவு இரவு தூங்கும் முன் 1-2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பிறகு வெந்தயத்தை மென்று சாப்பிடுங்கள். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலே மூலநோய் சரியாகும். இது தவிர, வெந்தயத்தை பேஸ்ட் போலாக்கி அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் காயங்கள் சரியாகும்.
55
Fenugreek seeds benefits in tamil
வெந்தயத்தின் பிற நன்மைகள்:
வெந்தயம் பைல்ஸ் பிரச்சனையை நீக்குவதில் மட்டுமின்றி, பல பிரச்சினைகளையும் நீக்குவதில் பெரிதும் உதவுகிறது. அதாவது இது ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளை சரி செய்யும். இது தவிர, இது பசியையும் அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நினைவில் கொள்: பைல்ஸ் பிரச்சினைக்கு வெந்தயத்தை சாப்பிட்ட பிறகும் உங்களுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு, வலி இருந்தால் நீங்கள் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.