
குளிர்காலம் என்பதால் பலவிதமான தொற்று நோய்கள் பரவும் நேரம் இது. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இந்த சீசனில் வருவது வழக்கம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். இதற்கு குழந்தைகளின் உடல் செயல்பாடு முதல் ஆரோக்கியமான உணவு வரை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, இந்த சீசனில் குழந்தைகளுக்கு சீரான மற்றும் சத்தான உணவு கொடுப்பதில் முன்னுரிமை அளிப்பது, அது அவர்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
பழங்கள், காய்கறிகள், ஒல்லியான புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பது நல்லது. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் மற்றும் சர்க்கரை பொருட்கள் கனமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தவிர்க்க வேண்டும். எனவே இந்த குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக் கூடாது? எந்தெந்த உணவுகளை கொடுக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பால் எதுக்குங்க; எலும்புகளை உறுதியாக்கும் இந்த '5' உணவுகளை கொடுங்க!!
இறைச்சி:
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இறைச்சி கொடுப்பதே தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதில் புரதம் நிறைந்துள்ளது. எனவே இந்த சீசனில் குழந்தைகளுக்கு இறைச்சி கொடுத்தால் தொண்டை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பிற பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். அதற்கு பதிலாக மீன் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் உடனல அபாயங்கள் குறைக்கலாம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகிறது.
சர்க்கரை உணவுகள்:
குளிர்காலத்தில் சாக்லேட், குளிர்பானங்கள், டோனட் போன்ற இனிப்புகள் அதிகம் உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். அதிக சர்க்கரை உள்ள உணவுகள் குழந்தைகளின் வெள்ள ரத்த அணுக்களை குறைக்க வழிவகுக்கும். இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த சீசனில் உங்கள் குழந்தைகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க சர்க்கரை நிறைந்த உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
பொரித்த உணவுகள்:
எண்ணெயில் பொரித்த உணவுகளில் அதிக ளவு கொழுப்பு மற்றும் எண்ணெய் உள்ளதால், இது குழந்தைகளுக்கு மிகவும் மோசமான தீங்கு விளைக்கும். எனவே குளிர்காலத்தில் சமோசா, வடை போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளில் இருந்து உங்கள் குழந்தைகளை விலக்கி வைக்கவும்.
பால் பொருட்கள்:
சீஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவற்றில் விலங்குகளின் புரதம் அதிகமாக இருப்பதால் அவை குழந்தைகளுக்கு சளி உற்பத்தி அதிகரிக்க செய்யும். இதனால் சில சமயம் குழந்தைகளின் உடல் நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே குளிர்கால முடியும் வரை குழந்தைகளுக்கு பால் பொருட்கள் கொடுப்பதை குறைத்து, அதற்கு பதிலாக குளிர்காலத்திற்கு ஏற்ற உணவை கொடுங்கள்.
அதுமட்டுமின்றி, காளான், கீரை, சோயா சாஸ், பப்பாளி, புளித்த உணவுகள், தயிர், ஊறுகாய் போன்ற உணவுகளை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பது தவிர்க்க வேண்டும்.
என்ன கொடுக்கலாம்?
குளிர்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க புதிய பழங்கள், காய்கறிகள், பாதாம், முந்திரி, வால்நட், முழு தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கொடுக்கலாம் இது தவிர அவர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்கவும். இதனுடன் வீட்டில் தயாரித்த ஏதாவது ஒரு பழத்தின் ஜூஸை கொடுங்கள்.
இதையும் படிங்க: உங்க குழந்தைக்கு இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட கொடுங்க.. இனி மடமடனு சூப்பரா வெயிட் போடும்!