வெறும் '5' நிமிஷம் வாக்கிங்க்கு இவ்ளோ பவரா? என்னென்ன நன்மைகள்??

First Published | Jan 13, 2025, 8:46 AM IST

Walking Benefits : வெறும் 5 நிமிடங்கள் நடந்தாலே உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.  

Benefits of 5 minute walking in tamil

நாம் உடலுக்காக ஒதுக்கும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். தினமும் 5 நிமிட நடைபயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நாள்தோறும் நடைபயிற்சிக்கென்று குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.  நம்முடைய அன்றாட வேலைகளுக்கு நடுவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடப்பது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். அதிலும் ஐந்து நிமிடங்கள் நடந்தால் கூட உடலுக்கு நல்லது. இந்த பதிவில் ஐந்து நிமிடங்கள் நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக காணலாம். 

இதையும் படிங்க:   மெதுவாக நடந்தால் உடல் எடை குறையுமா? 

Benefits of 5 minute walking in tamil

மேம்படும் இரத்த ஓட்டம்: 

நம்முடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் சுறுசுறுப்பாக செயல்படுவோம். நீங்கள் நடக்கும்போது தசைகள் நன்கு செயல்பட்டு இதயம், மூளை ஆகிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராகும். நீங்கள் ஐந்து நிமிடம் நடந்தால் கூட உங்களுடைய ரத்த ஓட்டம் மேம்பட உதவுகிறது. நீங்கள் நடைபயிற்சி செய்யும்போது உடலில் உள்ள திசுக்களில் ஆக்சிஜனேற்றம் அதிகரிக்கும். 

சிறப்பான அறிவாற்றல்:  

தினமும் 5 நிமிடம் நடந்தால்  நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். கவனச்சிதறல் குறையும். மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி செயல்திறன் மேம்படும். நடப்பது உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையாக்க உதவும். 

Tap to resize

Benefits of 5 minute walking in tamil

அதிகரிக்கும் வளர்சிதை மாற்றம்! 

தினமும் குறுநடை போடுவது கூட உடலை பராமரிக்க உதவும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க வாய்ப்பாக அமையும். நடைபயிற்சியினால் உடலில் அதிக ஆற்றலை செலவிடும்போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். 

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு; 

நீங்கள் 5 நிமிடங்கள் நடந்தாலும் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். நீங்கள் நடக்கும்போது இன்சுலின் உணர்திறனை அதிகமாகும்ம் இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.  

Benefits of 5 minute walking in tamil

உயர் இரத்த அழுத்தம் குறையும்! 

தினமும் 5 நிமிடங்களாவது  குறுநடையை தொடர்ந்தால்  இரத்த அழுத்தம் குறைய உதவும். மனநிலையை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இதனால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது. 

மன ஆரோக்கியம் எவ்வாறு மேம்படும்? 

உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க நடைபயிற்சி செல்வது அவசியம். நீங்கள் தினமும் ஐந்து நிமிடங்கள் நடந்தால் மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரந்து உங்களுடைய பதட்டத்தை குறைக்கிறது. குறுநடை உங்களுடைய மனச்சோர்வை குறைக்கும். 

Benefits of 5 minute walking in tamil

ஆற்றல் மேம்பாடு: 

தினமும் 5 நிமிடங்கள் நடந்தால் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கும். இதனால் புத்துணர்வாக உணர்வீர்கள். தினமும் நடப்பதை பழக்கப்படுத்த குறிப்பிட்ட நேரத்தில் நடப்பதை வழக்கப்படுத்த வேண்டும்.  தினமும் காலை, மதியம், மாலை ஆகிய வேளைகளில் வெறும் 5 நிமிடங்கள் நடப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதை கண்கூடாக காண்பீர்கள்.

இதையும் படிங்க:  வேற ஒரு பயிற்சியும் வேணாம்...தினம் '2' கிமீ  வாக்கிங்ல எடையை குறைக்கலாம்!! 

Latest Videos

click me!