
1937 ஆம் ஆண்டு டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் மிர் உஸ்மான் அலி கான் இடம் பெற்றார். ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமாக இருந்த இவரை "உலகின் மிகப்பெரிய பணக்காரர்" என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. 40களின் முற்பகுதியில் சுமார் 236 பில்லியன் டாலர் (ரூ. 18 லட்சத்து 68 ஆயிரம் கோடி) நிகர மதிப்புடன், நிஜாம் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தார்.
மிர் உஸ்மான் அலி கான் அரிதான ஜேக்கப் வைரத்தை, பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார் என்பது பலருக்குத் தெரியாது, ஆனால் அதன் விலை ரூ. 100 கோடி என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, மிர் உஸ்மான் அலி கான் 50 ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் வைத்திருந்தார், அதில் மிகவும் விரும்பப்படும் சில்வர் கோஸ்ட் த்ரோன் காரும் அடங்கும்.
நிஜாம் என்ற பட்டத்தை வகித்த கடைசி நபர் இவர்தான். ஹைதராபாத் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1948 இல் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் மாநிலத்தின் கவர்னராக பணியாற்ற முடிந்தது.
மிர் உஸ்மான் அலி கானுக்குச் சொந்தமான மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா?
கோல்கொண்டா சுரங்கங்கள்
மிர் உஸ்மான் அலி கான் கோல்கொண்டா வைரச் சுரங்கங்களை வைத்திருந்தார், மேலும் அது ஹைதராபாத் நிஜாம்களுக்கு செல்வத்தின் முக்கிய ஆதாரமாக இருந்தது. 16 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை உலகின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய வைரங்களின் வர்த்தக மையமாக இந்த சுரங்கங்கள் செயல்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில் உலக சந்தைக்கு வைரங்களை வழங்கும் ஒரே நாடாக ஹைதராபாத் மாகாணம் மாறியது.
கோ-இ-நூர், ஹோப் டயமண்ட், தர்யா-இ நூர், நூர்-உல்-ஐன் டயமண்ட், பிரின்சி டயமண்ட், ரீஜண்ட் டயமண்ட் மற்றும் விட்டல்ஸ்பாக் டயமண்ட் போன்ற பல விலைமதிப்பற்ற வைரங்களை மிர் உஸ்மான் அலி கான் வைத்திருந்தார்.
தங்கம் மற்றும் நகைகள்
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிஜாமின் தங்கம் மற்றும் நகைகள் அவரது சொத்து மதிப்புக்கு 2933537733.42 டாலர் பங்களித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நீங்கள் படித்தது சரிதான்!
இந்தியாவின் மற்ற அரச குடும்பங்களை விட ஹைதராபாத் நிஜாம்கள் அதிக நகைகளை வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. இதில் , இந்திய அரசாங்கம் 173 நகைகளை வாங்கியது, அதில் 2,000 காரட் மரகதக் கற்கள் மற்றும் 40,000 முத்துக்கள் அடங்கும். அதில் ரத்தினக் கற்கள், பதக்கங்கள், காதணிகள், கழுத்தணிகள், கைப்பட்டைகள், வளையல்கள் உள்ளிட்ட பல நகைகள் இருந்தன.
உலகின் ஐந்தாவது பெரிய மெருகூட்டப்பட்ட சொலிட்டரான வரலாற்று சிறப்புமிக்க ஜேக்கப் வைரத்தையும் மிர் உஸ்மான் அலி கான் வைத்திருந்தார், இது அசல் உரிமையாளர் அலெக்சாண்டர் மால்கன் ஜேக்கப்பின் பெயரிடப்பட்டது.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்
ஹைதராபாத்தின் எட்டாவது நிஜாம், இளவரசர் முகர்ராம் ஜா, தனது கேரேஜில் கார்களுக்கான சிறப்பு இடத்தைக் கொண்டுள்ளார். வயரின் கூற்றுப்படி, அவர் தனது தாத்தா மிர் உஸ்மான் அலி கானிடமிருந்து ஒரு ஸ்க்ராப்யார்ட் காரை பெற்றார். 1907 மற்றும் 1947 க்கு இடையில், ரோல்ஸ் ராய்ஸ் உலகளவில் அதன் 36,000 சொகுசு கார்களை விற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தியா இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் 1,000 கார்களைப் பெற முடிந்தது, மிர் ஒஸ்மான் அலி கான் 50 கார்களை வாங்கினார். அவர் 1912 இல் வாங்கிய பார்கர்-கோச்-கட்டமைக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் கோஸ்ட் காரை வைத்திருந்தார்.
நிர்வாகத் திட்டங்கள்
மிர் ஒஸ்மான் அலி கான் தனது மகத்தான சொத்து மதிப்பைப் பயன்படுத்தி ஹைதராபாத் மக்களுக்காக பல பொது நிறுவனங்களைக் கட்டினார். உஸ்மானியா பொது மருத்துவமனை இன்னும் நகரத்தில் ஒரு பிரபலமான மருத்துவ மையமாக உள்ளது. ஹைதராபாத் ஸ்டேட் வங்கி மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தையும் அவர் திறந்து வைத்தார். 1908 ஆம் ஆண்டு மூசி நதி வெள்ளத்திற்குப் பிறகு பேகம்பேட்டை விமான நிலையம், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மற்றும் இரண்டு நீர்த்தேக்கங்களான உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகியவற்றின் கட்டுமானத்தையும் அவர் ஆணையிட்டார்.