உங்க ஷாம்புல இந்த '3' கலந்து யூஸ் பண்ணுங்க; முடி நீளமாக வளரும்!!

First Published | Jan 11, 2025, 7:51 PM IST

Hair Growth Tips : உங்கள் முடி நீளமாக வளர உங்கள் ஷாம்புவில் சில பொருட்களை கலந்து பயன்படுத்தி வந்தால் போதும்.

hair growth tips in tamil

நீளமான முடி யாருக்கு தான் பிடிக்காது. ஒவ்வொரு பெண்களும் தனக்கு நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் விலை உயர்ந்த எண்ணைகள் ஷாம்புகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றால் எந்த பலனும் இல்லை. கூடுதலாக செலவு ஆனது தான் மிச்சம். இதுதவிர, தலைமுடிக்கு பலவிதமான ஹேர் பேக்குகளையும் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், எந்தவித செலவுமின்றி, சிரமமும் இல்லாமல் உங்கள் தலை முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் கறுகறுவென்று வளர வைக்க முடியும் தெரியுமா?

hair growth tips in tamil

அதுவும் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவால் இது சாத்தியமாகும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன் சில மூன்று பொருட்களை மட்டும் சேர்த்தால் போதும் உங்கள் தலைமுடி நீளமாக வளர ஆரம்பிக்கும். அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

Tap to resize

hair growth tips in tamil

இதற்கு இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் இவை மூன்றையும் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கலந்து, வழக்கமாக நீங்கள் ஷாம்புவை போல் உங்கள் தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

இதையும் படிங்க:  முடி நீளமா வளர.. சின்ன வெங்காயத்தோட இந்த '1' எண்ணெய் சேர்த்து தேய்ச்சு பாருங்க!!

hair growth tips in tamil

இதற்கு ஒரு கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான அளவு ஷாம்பு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இதை உங்களது தலைமுடியில் நன்றாக தடவி பிறகு எப்போதும் போல குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிக்கும் போது செய்யக் கூடாத '5' தவறுகள்.. பலரும் அறியாத தகவல்

hair growth tips in tamil

முடி வளர்ச்சிக்கு காபி எப்படி உதவுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.ஆனால் உண்மையில் காஃபி முடி உதிர்வை குறைக்கும் மற்றும் புதிய முடி வளர உதவும்.
அதுபோல லவங்கப்பட்டையும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த முறையை நீங்கள் தொடர்ந்து 2 வாரம் செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Latest Videos

click me!