Drinks to Help You Sleep at Night in tamil
நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். நீங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், போதுமான அளவு தூங்க வேண்டும். ஏனெனில், நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க தினமும் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. இதனால் அவர்கள் பல வகையான நோய்களை தினமும் சந்திக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இரவல் நன்றாக தூங்கு உதவும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் மூன்றை நீங்கள் தினமும் இரவு நிம்மதியான தூக்கம் உங்களுக்கு கிடைக்கும்.
Sleeping
சூடான பால்:
இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க விரும்பினால், சூடான பால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் அமினோ அமிலம் உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். முக்கியமாக சூடான பால் குடிப்பதும் மூலம் மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். இது தவிர, தொண்டை மற்றும் உடலில் மற்ற பகுதிகளுக்கும் சூடான பால் நல்லது.
கெமோமில் டீ:
இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கெமோமில் டீ குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இது வீக்கத்தை குறைக்கும் மற்றும் சருமத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த டீ தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பெரிது உதவுகிறது. எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இரவில் தூங்கும் முன் இந்த டீ குடியுங்கள்.
sleep
புதினா டீ:
புதினா டீயில் காஃபின் மற்றும் கலோரிகள் இல்லை என்பதால், இது உங்களது உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகின்றது. மேலும் இந்த டீ தசைகளுக்கும் நல்லது. இந்த டீயில் இருக்கும் ஆன்ட்டி-பாக்டரியல் பண்புகள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
மஞ்சள் பால்:
மஞ்சள் பாலில் குர்குமின் உள்ளது. இது உங்களது மனசோர்வு, கவலை போன்ற பிரச்சினைகளை நீக்க உதவுகிறது முக்கியமாக இரவு தூங்கும் முன் இந்த பால் குடித்தால் நன்றாக தூங்குவீர்கள்.
sleep
பாதாம் பால்:
பாதாம் பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன் இந்த பால் குடித்து வந்தால் உங்கள் தூக்கத்தின் தரம் மேம்படும். இது தவிர உடல் சோர்வும் நீங்கும்.
அஸ்வகந்தா டீ:
அஸ்வகந்தா டீ உங்களது தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்லது ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது. எனவே ல், நீங்கள் தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் தினமும் 1 முன் ஒரு கப் இந்த டீ குடியுங்கள்.
இதையும் படிங்க: இந்த சிம்பிள் டிப்ஸ் மட்டும் போதும்; நைட் படுத்த உடனே நல்ல தூக்கம் வரும் - வாங்க பார்க்கலாம்!