வீடு பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஒட்டடை அடித்து, மாப் போட்டு சுத்தம் செய்கிறோம். கூடுதலாக தினமும் வீட்டை தூத்து பெருக்குகிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் பாத்ரூமை அடிக்கடி சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். எனவே, பாத்ரூமை சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக, பாத்ரூமில் இருக்கும் பைப் மற்றும் ஷவரை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால், அவை துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். பிறகு அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.
24
Remove rust from shower head in Tamil
உங்கள் வீட்டில் இருக்கும் ஷவரில் இருந்து தண்ணீர் சரியான முறையில் வராமல் இருக்கிறதா? அல்லது நாலாபுரமும் தெரிந்து வருகிறதா? ஆம், என்றால் உங்கள் வீட்டு ஷவரில் இருக்கும் துறைகளில் துருக்கள் அடைத்து இருக்கிறது என்று அர்த்தம். அவற்றை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். நீங்க கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவற்றை சுலபமாக சுத்தம் செய்து விடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்
துருப்பிடித்த ஷவரை பிரகாசிக்க வைக்க 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 4 ஸ்பூன் சமையல் சோடா, அரை கப் வினிகர் மற்றும் சிறிதளவு துணி துவைக்கும் சோப்பு பொடியும் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு பேக்கிங் சோடா வினிகர் மற்றும் சோப்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை ஒரு பாலித்தீன் கவரில் ஊற்றி ஷவர் தலையில் இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும் .பிறகு மறுநாள் காலை எழுந்ததும் பாலிதீன் கவரை எடுத்து பார்த்தால் ஷவரில் துருக்கள் கறைகள் இல்லாமல் இருக்கும். பிறகு ஒரு வேண்டாத டூத் பிரஷ் கொண்டு அவற்றை நன்றாக தேய்க்க வேண்டும் இவ்வாறு செய்தால் அனைத்து துருக்கள் மற்றும் கறைகள் நீங்கி விடும். பிறகு தண்ணீரை கொண்டு சுத்தமாக கழுவும் வேண்டும். இப்போது பார்த்தால் உங்களது ஷவர் புதியது போல மின்னும்.
44
Shower head maintenance in Tamil
ஷவரை பராமரிப்பது எப்படி?
ஷவரின் தலைப்பகுதி துருப்பிடிக்காமல் இருக்க அதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டாம். இதற்கு நீங்கள் பழைய டூத் பிரஷ் மற்றும் சோப்பு பயன்படுத்தலாம்.\