MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாத்ரூம் சுத்தமா இருந்தாலும்  நாத்தம் வருதா? மணக்க செய்யும் சூப்பர் டிப்ஸ்!!

பாத்ரூம் சுத்தமா இருந்தாலும்  நாத்தம் வருதா? மணக்க செய்யும் சூப்பர் டிப்ஸ்!!

Bathroom Smell Cleaning Tips : குளியலறையை சுத்தம் செய்த பிறகும் அதிலிருந்து துர்நாற்றம் வீசினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உதவி குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 31 2024, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bathroom cleaning tips in tamil

Bathroom cleaning tips in tamil

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் அழகை பராமரிக்க வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாத்ரூமை எவ்வளவு அழகாக வைக்கம் முயற்சி செய்தாலும் அதற்கான பலன் சரியாக கிடைப்பதில்லை. அதாவது, குளியலறை குறித்த சுத்தம் குறித்து நாம் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை துர்நாற்றம் தான். ஆம், பாத்ரூமை நாம் எவ்வளவுதான் சுத்தமாக வைத்தாலும் அதிலிருந்து துர்நாற்றம் வருவதை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாமல் போகிறது. பாத்ரூமில் இருந்து வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சந்தைகளில் பலவிதமான வாசனைப் பொருட்கள் விற்றாலும் அவை நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பாத்ரூமில் வரும் துர்நாற்றத்தை சுலபமாக தடுத்து, பாத்ரூம் முழுவதும் நறுமணம் வீச வைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
reasons for bathroom smell in tamil

reasons for bathroom smell in tamil

பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள்:

பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணங்களில் முதலில் இருப்பது டாய்லெட் மற்றும் ஷவர் ஒரே அறையில் அருகருக இருப்பது தான். மற்றொரு காரணம் என்னவென்றால் குளியலறை தொட்டி தான். ஆம், சில சமயங்களில் குளியலறை தொட்டியில் கறை அல்லது பாசி படிந்து இருந்தால் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மேலும் சில நேரங்களில் டாய்லெட்டில் ஈரம் காயாமல் இருந்தால் கூட துர்நாற்றம் ஏற்படும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் பாத்ரூம்  வாசனையாக இருக்கனுமா? இந்த '7' டிப்ஸ்ல ஒன்னு போதும்!!

35
Bathroom smell removal in tamil

Bathroom smell removal in tamil

பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவது தடுக்க டிப்ஸ்:

கிருமி நாசினி:

பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க கிருமி நாசினி கொண்டு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பாத்ரூமை துடைக்கவும் அல்லது தெளிக்கவும். இப்படி செய்தால் பாத்ரூமில் துர்நாற்றம் அடிக்காது.

இயற்கை வாசனை பொருட்கள்:

சந்தையில் விற்கப்படும் சில இயற்கையான வாசனை வீசும் பொருட்களை டாய்லெட்டில் வாங்கி வையுங்கள். இதனால் பாத்ரூமில் துர்நாற்றம் நீங்கி வாசனை அடிக்கும். அதுமட்டுமின்றி டாய்லெட் ரோல், பிளேஸ் உபயோகப்படுத்துவதன் மூலமும் பாத்ரூமில் இருந்து துர்நாற்றத்தை சுலபமாக ஆகற்றிவிடலாம்.

இதையும் படிங்க:  பேக்கிங் சோடா இருந்தா போதும்... பாத்ரூம் வாளி,  கப்பில் உள்ள மஞ்சள் கறை நீங்க சூப்பர் டிப்ஸ்!!

45
Fresh bathroom tips in tamil

Fresh bathroom tips in tamil

வினிகர் & எலுமிச்சை:

பாத்ரூமில் துர்நாற்றம் வீசினால் சில துளிகள் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து பாத்ரூமில் தெளிக்க வேண்டும் அதுபோல பாத்ரூமின் சுவற்றில் ஈரம் இருந்தால் அவற்றை உடனே சரி செய்யவும். ஏனெனில் ஈரமான சுவற்றால் கூட பாத்ரூமில் துர்நாற்றம் அடிக்கும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா கெட்ட வாசனை அகற்ற பயனுள்ளதாகும். எனவே இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி அதை பாத்ரூம் முழுவதும் தெளித்தால் பாத்ரூமில் துர்நாற்றம் நீங்கிவிடும் வேண்டுமானால் இதனுடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கிராம்பு:

கிராம்பு வலுவான வாசனை உள்ளதால் சில கிராமத்துண்டுகளை பாத்ரூமில் வைக்கலாம். இதனால் பாத்ரூம் முழுவதும் துர்நாற்றம் நீங்கி வாசனை வீச ஆரம்பிக்கும்.

55
Bathroom cleaning hacks in tamil

Bathroom cleaning hacks in tamil

முக்கி குறிப்பு :

- பாத்ரூமில் காற்றோட்டம் இருப்பது மிகவும் அவசியம். மேலும் புதிய காற்று உள்ளே வந்து துர்நாற்றம் நிறைந்த காற்று வெளியே போகும் படி வழி இல்லையென்றால் கண்டிப்பாக பாத்ரூமில் துர்நாற்றம் வீசும். பாத்ரூமில் காற்றோட்டம் இருப்பது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

- அதுபோல குளியலறையில் பயன்படுத்தும் தண்ணீர் சரியாக வடிகாலுக்கு செல்கிறது என்பதே உறுதிப்படுத்தவும். ஒருவேளை கழிவு நீர் தேங்கி இருந்தால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி அதன் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அவ்வப்போது வாய்க்காலை சுத்தம் செய்யுங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும்.

- வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பாத்ரூமை சுத்தம் செய்வது மிகவும் அவசியம் இதனால் உங்கள் வீட்டு பாத்ரூம் துர்நாற்றம் இல்லாமல் தூய்மையாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image2
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Recommended image3
Water Tank Leakage: தண்ணீர் தொட்டியில் விரிசலா? புதிய தொட்டி வாங்கும் முன் இதைச் செய்யுங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved