மூன்று..
உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்றால் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் வாழை இலையை போட வேண்டும். பிறகு அதன் மேல் கட்டிய பூவை வைக்கவும். பின் ஈரமான காட்டன் துணியை நனைத்து பிழிந்து பாத்திரத்தை மூடி, சில்வர் தட்டை அதன் மேல் கவிழ்த்து வைத்தால் பூ ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும். வாழை இலையை தண்ணீரில் மிதக்க வைக்கும் போது வாழை இலைக்குள் தண்ணீர் வந்து விடக்கூடாது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு : நீங்கள் காட்டன் துணியை பயன்படுத்தும் போது அது காய்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் நனைத்து வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் மல்லிகை பூ வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.