Garlic and Onion Breath : வெங்காயம், பூண்டு சாப்பிட்டதும் வாய் மோசமா நாறுதா? அதை தடுக்க நச்சுனு நாலு டிப்ஸ்

Published : Nov 10, 2025, 03:17 PM IST

வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிட்ட பிறகு ஏற்படும் வாய் துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

PREV
15
Onion and Garlic Breath Remedies

நாம் சாப்பிடும் உணவில் சுவைக்காக வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டு பொருட்களும் உணவில் சுவையைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அதிக அளவு ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குகிறது. என்னதான் இவை ஆரோக்கியமாக இருந்தாலும் அவற்றை பச்சையாக சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக வெங்காயம், பூண்டு சாப்பிட்ட பிறகு பிறருடன் பேசும்போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் அவற்றில் இருக்கும் அல்லிசின், மெதில் சல்பைட் போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். இவை இரத்தத்தில் கலந்து வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் வெங்காயம் பூண்டு சாப்பிட்ட பிறகு ஏற்படும் துர்நாற்றத்தை சரி செய்ய உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
பால் குடிக்கவும் :

வெங்காயம், பூண்டு சாப்பிட்ட பிறகு ஏற்படும் துர்நாற்றத்தை போக்க பால் சரி செய்யும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே வெங்காயம், பூண்டு சாப்பிட்டு முடித்த பிறகு 15- 20 நிமிடங்கள் கழித்து கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடியுங்கள். வாயில் ஏற்படும் துர்நாற்றம் உடனடியாக குறைந்துவிடும்.

35
சூடான நீர் :

வெங்காயம் மற்றும் பூண்டால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை போக்க வெதுவெதுப்பான நீரை குடியுங்கள். அதை வாயை புத்துணர்ச்சியாக வைப்பது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

45
எலுமிச்சை சாறு :

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அவை வெங்காயம், பூண்டு சாப்பிட்ட பிறகு ஏற்படும் துர்நாற்றத்தை திரட்டி அடிக்க உதவுகிறது இதற்கு சூடான நீருடன் எலுமிச்சை சாறு கலந்து 2-5 முறை வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.

55
ஆப்பிள் சாப்பிடுங்கள் :

வெங்காயம் பூண்டு சாப்பிட்டு பிறகு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் என்று பல் மருத்துவர்கள் பரிந்துரைகள். ஏனெனில் ஆப்பிளில் இருக்கும் என்சைம்கள் வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள சல்பரின் வீரியத்தை குறைத்து விடும். இதனால் வாயில் துர்நாற்றம் வீசாது.

Read more Photos on
click me!

Recommended Stories