பொதுவாக குழந்தைகள் உடல்நல குறைவு ஏற்பட்டாலோ, பசியாக அல்லது சோர்வாக இருந்தாலோ அழுவார்கள். இதுதவிர ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தாலும், பக்கத்தில் வேறு ஏதேனும் குழந்தை அழுதாலும் இவர்களும் அழுவார்கள். ஏன் சில சமயங்களில் பொம்மை அல்லது பிஸ்கட் உடைந்தாலும் கூட அழுவார்கள். இது பல வீடுகளில் காணப்படும் பொதுவான விஷயம் என்றாலும், அதை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் அழுவது பலவீனத்தின் அடையாளம் அல்ல. அது ஒரு வகையான தொடர்பும் கூட. இத்தகைய சூழ்நிலையில் எதற்கெடுத்தாலும் அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோர்களுக்காக உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
25
அழுகைக்கான காரணத்தை கண்டறி
பெற்றோர்களே உங்கள் குழந்தை எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்றால் முதலில் அதற்கான காரணத்தை கண்டறியுங்கள். அதாவது பசி, சோர்வு, தூக்கமின்மை, பயம் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் அழுவார்கள். குழந்தையாக இருக்கும்போது இப்படி அழுவது இயல்பான விஷயம். ஆனால் வயது கூட கூட இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் நீங்கள் சங்கடமாக உணருவீர்கள். எனவே, இதுபோன்ற சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் அமைதியாக மற்றும் அன்பாக பேசி குழந்தையின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
35
அழுதவுடன் கேட்டதை கொடுத்து பழகாதே!
பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். அதாவது குழந்தைகள் அழுது அடம் பிடித்து கேட்பதை உடனே வாங்கி கொடுக்கிறார்கள். இந்த பழக்கமானது, அழுதால் விரும்பியதை உடனே பெறலாம் என்ற எண்ணம் குழந்தையின் மனதில் உருவாக்குகிறது. எனவே, இப்படி வாங்கி கொடுப்பதற்கு பதிலாக அவர்களின் கவனத்தை திசை திருப்பம் முயற்சி செய்யுங்கள். சிறிது நேரத்தில் குழந்தை அழுவதை நிறுத்தி விடும்.
உங்கள் பதிலில் நிலைத்தன்மை தேவை. அடிப்பது, திட்டுவது கூடாது. தினமும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். இது அவர்களின் நம்பிக்கையை வளர்த்து அழுகையைக் குறைக்கும்.
55
அழும்போது இப்படி செய்தால்..
அன்பு, பொறுமை, தெளிவான தகவல் தொடர்பு போன்றவை இருந்தால் குழந்தைகள் தங்களது உணர்வுகளை உங்களிடம் தைரியமாக வெளிப்படுத்துவார்கள். மேலும் அவர்கள் அழுகையையும் கட்டுப்படுத்துவார்கள். எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தை அழும்போது அவர்களை கட்டிப்பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். பிறகு அவர்களது தேவை என்ன என்று கேளுங்கள்.