Pregnancy Tips : கர்ப்பிணிகள் அடிக்கடி அசைவம் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியத்தை பாதிக்குமா..?சரியான விளக்கம் இங்கே

Published : Nov 07, 2025, 03:55 PM IST

கர்ப்பிணிகள் அடிக்கடி அசைவம் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியத்தை பாதிக்குமா? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இங்கு காணலாம்.

PREV
17
Non Veg During Pregnancy

கருவுற்ற பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய ஆரோக்கியம் நன்றாக இல்லாவிட்டால் அது குழந்தையும் சேர்த்தே பாதிக்கும். அதனால் தான் கர்ப்பிணிகளை சில உணவுகளைத் தவிர்க்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்தப் பதிவில் கர்ப்பிணிகளுக்கு அசைவம் ஏற்றதா? அடிக்கடி சாப்பிடலாமா? போன்ற கேள்விகளுக்கு விடைகாணலாம்.

27
Pregnancy Tips

கருவுற்ற பெண்கள் சாப்பிடும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவர்களின் இரத்தத்தின் மூலம் குழந்தைக்கும் கிடைக்கிறது. ஆகவே தான் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அசைவ உணவிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆனால் அதை சாப்பிடும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

37
புரதச்சத்து பெட்டகம்!

சிக்கன், மட்டன், மீன் ஆகிய அசைவ உணவுகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் இந்தச் சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களுடைய உறுப்புகள், தசைகள், திசு வளர்ச்சியில் புரதம் முக்கிய பங்காற்றுகிறது. கருவுற்ற பெண்களின் தசைகளுக்கும் இது தேவையானது.

47
சத்துக்களின் ஆதாரம்

கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்து ஆடு, மாடு, பன்றி போன்ற சிவப்பு இறைச்சியில் உள்ளன. இவை இரத்தசோகை வராமல் தடுக்கிறது. இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் கிடைக்க சால்மன், கானாங்கெளுத்தி, ட்ரவுட் ஆகிய மீன்களை உண்ணலாம். இதில் காணப்படுன் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (DHA) குழந்தையின் மூளை, கண்கள் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.

57
முட்டை

நரம்பு மண்டல ஆரோக்கியம், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் பி, பி12 ஆகியவை அசைவ உணவுகளில் உள்ளன. அடிக்கடி அவித்த முட்டை அல்லது குறைவாக எண்ணெய் சேர்த்த ஆம்லேட் எடுத்துக் கொள்ளலாம். இதிலும் தேவையான சத்துக்கள் கிடைக்கும். இப்படி பல சத்துக்களை அசைவ உணவுகள் கொண்டுள்ளதால் அவற்றை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அளவாகவும், சுத்தமாகவும் சாப்பிடுவது அவசியம்

67
இதில் கவனம்

அசைவ உணவுகளை நன்கு சுத்தப்படுத்தி அதன் பின்னரே சமைக்க வேண்டும். ஏனென்றால் இதில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் இருக்கக் கூடும். சமைக்கும் பாத்திரங்கள், கத்திகள் உள்பட அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த இறைச்சியை தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட மீன்களை தவிர்க்க வேண்டும். ப்ரெஷான மீன்களை மட்டுமே வாங்குவது நல்லது.

77
நினைவில் கொள்

அசைவ உணவுகள் சில சமயங்களில் தொற்று நோய்கள் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். எளிய மசாலாக்கள் சேர்த்து நன்கு சமைத்து உண்ணலாம். ஆனால் அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். பழங்கள், கீரைகள், காய்கறிகள், பால் பொருட்கள், முழு தானியங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories