How to Make Donne Biryani at Home: வழக்கமா செய்யுற மசாலா பிரியாணி சாப்பிட்டு போர் அடிச்சுடுச்சா? அப்போ கர்நாடகாவின் ஃபேமஸ் தொன்னே பிரியாணியை ட்ரை பண்ணுங்க.இந்த பிரியாணியை செய்வது ரொம்ப ஈஸி. ஹோட்டல் சுவையில வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
வழக்கமா ஒரே மாதிரி ரெட் மசாலா பிரியாணி சாப்பிட்டு உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா? அப்போ இந்த முறை, கர்நாடகாவின் ரொம்பவே பிரபலமான 'தொன்னே பிரியாணி' அல்லது 'கிரீன் சிக்கன் பிரியாணி'யை வீட்ல செஞ்சு பாருங்க. பார்க்குறதுக்கு பச்சை நிறத்துல வித்தியாசமா இருக்குன்னு நினைக்காதீங்க, சாப்பிடுறதுக்கும் இது ரொம்பவே சுவையா இருக்கும். கர்நாடகா முழுக்க இந்த பிரியாணி ரொம்ப ஃபேமஸ். இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா, சமைக்கவே தெரியாத பேச்சிலர்ஸ்கூட இதை ஈஸியா செஞ்சிடலாம். சரி, வாங்க... 'தொன்னே பிரியாணி' செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை ஸ்டெப்-பை-ஸ்டெப்பா பார்க்கலாம்.
முதலில், ஜீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவி, குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன் துண்டுகளைப் போட்டு, அதனுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து ஊற வைக்கவும்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கசூரி மேத்தி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசான பச்சை பேஸ்ட்டாக (Green Paste) அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பிரியாணி இலை, சோம்பு, ஏலக்காய் உள்ளிட்ட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்த பச்சை பேஸ்ட்டைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பிறகு, பிரியாணி மசாலா, கறி மசாலா தூள் (curry masala powder), மிளகுத் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது, ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து, மசாலா சிக்கனில் நன்றாகப் பிடிக்கும்படி கிளறவும். குக்கர் மூடியை லேசாக மேலே வைத்து, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவிடவும். இடையில் அவ்வப்போது கிளறிவிடவும் (இந்த சமயத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்).
சிக்கன் ஓரளவுக்கு வெந்ததும், ஊறவைத்த அரிசியை (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்க்கவும். பிறகு, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் 4 கப் சுடுதண்ணீர் ஊற்றிக் கிளறவும்.
தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும்போது, குக்கர் மூடியைப் போட்டு 2 விசில் விடவும். பிறகு, தீயை குறைத்து, சுமார் 20 நிமிடங்கள் தம் (Dum) போடவும்.
இதை குளிர்ச்சியான வெங்காய ரைத்தா மற்றும் வேகவைத்த முட்டையுடன் சூடாகப் பரிமாறவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.