நீர் யானைகளின் வியர்வை ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது தெரியுமா? 99% பேருக்கு தெரியாத சுவாரஸ்யமான அறிவியல் காரணம்.!

Published : Jul 22, 2026, 12:25 PM IST

Hippopotamus Facts in Tamil: நீர் யானைகளின் வியர்வை ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன் பின்னால் உள்ள சுவாரஸ்யமான அறிவியல் காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Hippopotamus Facts in Tamil

இந்த உலகில் உள்ள வித்தியாசமான உயிரினங்களில் நீர் யானைகளும் ஒன்று. மிகப் பெரிய உருவத்தில் இருக்கும் இவை, பெரும்பாலான நேரத்தை தண்ணீரிலேயே கழிக்கின்றன. மற்ற விலங்குகளைப் போல நீர் யானைகளின் வியர்வை வெள்ளை நிறத்திலோ அல்லது நிறமற்றோ இருக்காது. இவற்றின் வியர்வை சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. இதன் பின்னால் உள்ள அறிவியல் காரணங்களும், அந்த வியர்வை நீர் யானைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  அமெரிக்காவில் குழந்தையை அடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சிறை தண்டனை கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

25
நீர் யானைகளின் வியர்வை சிகப்பாக இருக்க காரணம்

நீர் யானைகளின் வியர்வை சிகப்பாக இருப்பதற்கு சுவாரஸ்யமான அறிவியல் காரணம் உள்ளது. உண்மையில் இது வியர்வையோ, ரத்தமோ கிடையாது. அவற்றின் தோலுக்கு அடியில் இருக்கும் சிறப்பு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஒரு திரவமாகும். இந்த திரவம் சுரக்கும் பொழுது நிரமற்று இருக்கும். ஆனால் காற்றில் உள்ள ஆக்சிஜன் உடன் வினை புரியும் பொழுது சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறமாக மாறிவிடுகிறது. இது பார்ப்பதற்கு ரத்தம் வழிவது போல் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை “பிளட் ஸ்வெட்” என்று தவறாக அழைப்பார்கள்.

இதையும் படியுங்கள் -  யானைகள் பழி வாங்குமா? 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேடி வந்த யானை.! ஒரே குடும்பத்தில் பறிபோன 4 உயிர்.!

35
இயற்கையான சன் ஸ்கிரீன்

நீர் யானைகளுக்கு உடலில் முடிகள் இருக்காது. அவற்றின் தோலும் மிகவும் மென்மையாக இருக்கும். ஆப்பிரிக்காவின் கொளுத்தும் வெயிலில் அவற்றின் தோல் கருகிப் போக வாய்ப்பு உள்ளது. இந்த சிகப்பு திரவத்தில் ஹிப்போசுடோரிக் அமிலம் மற்றும் நார்ஹிப்போசுடோரிக் அமிலம் ஆகிய இரண்டு அமிலச் சேர்மங்கள் உள்ளன. இவை சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி தோலுக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒரு இயற்கையான சன் ஸ்கிரீன் போல செயல்பட்டு நீர் யானைகளின் தோலை பாதுகாக்கின்றன.

இதையும் படியுங்கள் -  Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?

45
ஆன்டிபயாட்டிக்

ஆண் நீர் யானைகள் எல்லை பிரச்சனைகளுக்காக மற்ற நீர் யானைகளுடன் கொடூரமாக சண்டை போட்டுக் கொள்ளும். இதனால் அவற்றின் உடலில் பெரிய காயங்களும் ஏற்படும். கிருமிகள் நிறைந்த சேற்றிலும் தண்ணீரிலும் அவை கிடந்தாலும் இந்த திரவத்தில் உள்ள ஆன்டிபயாட்டிக் குணங்கள் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தொற்றாமல் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகின்றன.

இதையும் படியுங்கள் -  லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

55
பூச்சி விரட்டி மற்றும் மாய்சரைசர்

தண்ணீரிலும் சேற்றிலும் வாழும் நீர் யானைகளை ஈக்கள், கொசுக்கள் போன்ற பூச்சிகள் எளிதில் மொய்க்கும். இந்த சிவப்பு திரவத்தின் பிசுபிசுப்பான தன்மையும் அதன் வாசனையும் பூச்சிகள் நீர் யானைகளின் மேல் வந்து அமராமல் தடுக்கும் ஒரு பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. நீர் யானைகள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் பொழுது அவற்றின் தோல் வறண்டு வெடிப்பு விழுந்து விடும். இந்த திரவம் அவற்றின் தோலில் ஒரு லோஷன் போல பரவி மாய்சரைசராக செயல்பட்டு தோலின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் நீர் யானையின் உடலில் அதற்குத் தேவையான சன் ஸ்கிரீன், கிருமி நாசினி மற்றும் மாய்ஸ்ரைசர் மூன்றும் கலந்த ஒரு இயற்கை கிரீமை தயாரித்துக் கொள்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories