Cholesterol: சிக்கன் சாப்பிடுவதால் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?" என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
2015-16 தேசிய குடும்ப நல ஆய்வின் தரவுகளின்படி, இந்தியாவில் 78% பெண்களும் 70% ஆண்களும் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். இதில் பெரும்பாலானோர் முதல் தேர்வாக இருப்பது 'சிக்கன்' தான். ஆட்டுக்கறி போன்ற 'ரெட் மீட்' உணவுகளுடன் ஒப்பிடும்போது சிக்கனில் கொழுப்பு குறைவு மற்றும் விலையும் மலிவு என்பதால் பலரும் இதை விரும்புகின்றனர். இருப்பினும், "சிக்கன் சாப்பிடுவதால் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?" என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
26
ரெட் மீட்' Vs 'சிக்கன்' எது ஆபத்து அதிகம்?
ஆட்டுக்கறி போன்ற ரெட் மீட்களில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருப்பதால், அவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக உயர்த்தக்கூடியவை. இதற்கு மாற்றாக சிக்கன் ஆரோக்கியமானது என்றாலும், அதை எல்லை மீறி அதிகளவில் சாப்பிடுவதும் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
36
சிக்கன் ஆரோக்கியமானதா இல்லையா?
சிக்கன் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் ஏறுவதும் ஏறாமல் இருப்பதும் நீங்கள் அதை சமைக்கும் முறையைப் பொறுத்தது. சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெயைப் பயன்படுத்தி சிக்கன் சமைத்தால், உடம்பில் கொலஸ்ட்ரால் நிச்சயம் அதிகமாகும்.
சிக்கன் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகளை அள்ளித் தரும் ஒரு உணவாகும். சிக்கனில் 87 mg கொலஸ்ட்ரால், 237 mg கலோரிகள், 27.07 mg புரோட்டீன், 404 mg சோடியம், 13.5 mg கொழுப்பு, 221 mg பொட்டாசியம், 15 mg கால்சியம், 1.25 mg இரும்புச்சத்து மற்றும் 160 mcg வைட்டமின் ஏ உள்ளது.
56
கொலஸ்ட்ராலை உயர்த்தும் உணவுகள்
அதிகளவு எண்ணெய், வெண்ணெய் (Butter) மற்றும் நெய் பயன்படுத்திச் சமைக்கப்படும் பட்டர் சிக்கன், கடாய் சிக்கன், அஃப்கானி சிக்கன் மற்றும் எண்ணெயில் பொரித்த சிக்கன் (Deep Fried Chicken) போன்ற உணவுகள் உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எக்கச்சக்கமாக உயர்த்தும்.
66
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வழிகள்
சிக்கன் சாப்பிட்டும் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமென்றால், சமையலில் எண்ணெயைக் கணிசமாகக் குறைக்க வேண்டும். கிரில்டு சிக்கன் (Grilled Chicken), தந்தூரி சிக்கன் (Tandoori Chicken) அல்லது குறைந்த எண்ணெயில் வேகவைத்த சிக்கன் உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதிலும் கூட வெண்ணெய் மற்றும் நெய்யை அளவோடு பயன்படுத்துவது மிக அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.