சண்டையில்லாமல் காதல் வாழ்க்கையில் கொடி கட்டி பறக்க என்ன செய்ய வேண்டும்? நீங்கள் லவ் பண்ணுறீங்களா?

First Published Mar 6, 2023, 12:09 PM IST

காதல் வாழ்க்கையில் காதலனுக்கும், காதலிக்கும் இடையில் சண்டையே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். அப்படி சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
 

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

காதல் என்பது ஒருவர் மீது மற்றொருவருக்கு ஏற்படும் ஈர்ப்பு. கண்டவுடன் காதல், பார்த்து பழகிய வரும் காதல், வெறும் போனிலேயே பேசுவதால் வரும் காதல், சமூக வலைதளத்தின் மூலமாக காதல் கொள்வது என்று இன்றைய காலகட்டங்களில் பலரும் காதல் வயப்படுகின்றனர்.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

காதலில் பொறாமை இருக்கத்தான் செய்யும். நாம் காதலிக்கும் காதலி வேறொரு ஆணுடன் பேசினாலும் சரி, நமக்கே உரிமையான நம் காதலன் வேறொரு பெண்ணுடன் பேசினாலும் சரி கோபம் வரத்தான் செய்யும். இதனைத் தான் Possessiveness என்று சொல்வார்கள். தமிழில் பொறாமை என்று கூட சொல்லலாம்.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

அப்படி இருந்தால் இருவருமே அதனை புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக மட்டுமே நம் லவ்வர் நம்மீது எவ்வளவு அன்பும், ஆசையும் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், இதனை சந்தேகம் என்று எடுத்து கொள்ளக் கூடாது. நம் மீது நம் காதலனோ, காதலிக்கோ இருக்கும் ஒருவிதமான லவ், அன்பு என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

காதலனோ, காதலியோ யார் தப்பு செய்திருந்தாலும் குத்திக் காட்டக் கூடாது. நீ இப்படித்தான் செய்வேனு எனக்கு தெரியும் என்று சொல்லக் கூடாது. வேறு ஒருவர் குத்திக் காட்டினால் கூட தாங்கிக் கொள்வார்கள், ஆனால், நீங்கள் குத்திக்காட்டினால் அதனை தாங்கிக் கொள்ள மாட்டார்கள். இந்த உலகத்தில் அவர்களது பெற்றோரை விட உங்களைத் தான் அதிகமாக நம்புவார்கள், உங்களைத் தான் அதிகமாக நேசிப்பார்கள்.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

எப்போதும் போன்று இருக்க வேண்டும். உலகத்திலேயே உங்களுக்கு பிடித்த நபர் உங்களது காதலியாகத்தான் இருப்பார். காதலியுடன் இருக்கும் போது சிலருக்கு தலைகால் புரியாது. அப்படியெல்லாம் இருக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக ஐஸ் வைக்க கூடாது.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

இதுதான் உங்களது குணம் என்று நினைத்துக் கொள்வார். இன்று இல்லையென்றாலும், என்றாவது ஒரு நாள் உங்களது உண்மை முகம் தெரியவரும். அப்போது உங்களைப் பார்த்து அதிர்ச்சியடைவார். எப்போது நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். இதைத் தான் எந்த பெண்ணும் விரும்புவாள்.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

அன்பும், அக்கறையும் இருந்தாலும் கூட தனி மனித சுதந்திரம் கண்டிப்பாக தேவை. காதலனுக்கோ அல்லது காதலிக்கோ போன் வந்து பேசினால், யாரு, என்ன பேசுன என்றெல்லாம் கேட்க கூடாது.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

அப்படி நீங்கள் கேட்டாலே உங்களது லவ்வுக்கு நீங்கள் வைக்கும் ஆப்பு தான். உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் அவரே சொல்லியிருப்பாரே. உங்களைப் பற்றிய எல்லா விஷயத்தையும் மற்றொருவர் தெரிந்திருக்க வேண்டும்.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

காதலனோ, காதலியோ ஒருவரையொருவர் புரிந்து வைத்திருக்க வேண்டும். காலில் அணியும் காலணி முதல் தலையில் அணியக் கூடிய பூ வரை என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சண்டையில்லாத காதல் வாழ்க்கை

பெண்ணாக இருந்தால் காதலுக்கு என்ன ஷாம்பு பிடிக்கும், என்ன எண்ணெய் பயன்படுத்துவார், என்ன சோப்பு, வாட்ச், பெல்ட், செப்பல் சைஸ் என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்ட வேண்டும். பெண்ணுக்கு தன் மீது அக்கறை கொண்ட ஆணைத்தான் பிடிக்கும். காதலி என்பவர் நிரந்தர தோழி. பிரியவே கூடாது என்று நினைக்கும் வாழ்க்கைத் துணை.

click me!