மழை காலம் வந்தாலே வீட்டில் வரிசையாக பிரச்சனைகள் வர தொடங்கும். அதில் ஒன்றுதான் உப்பு மற்றும் சர்க்கரை கட்டி கட்டியாக மாறுவது. பிறகு அவற்றை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை மற்றும் உப்பு கட்டியாகாமல் பிரெஷ் ஆக இருக்கும். இதற்காக நீங்கள் எந்த ஒரு பணத்தையும் செலவழிக்க தேவையில்லை. சரி இப்போது இந்த பதிவில் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான சில டிப்ஸ்கள் குறித்து பார்க்கலாம்.
26
காற்று புகாத டப்பாக்கள் :
மழைக்காலத்தில் உப்பு மற்றும் சர்க்கரை ஃபிரஷ்ஷாக இருக்க அவற்றை காற்று புகாத டப்பாக்களில் சேமிக்கலாம். கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் இவற்றில் சேமிக்கும் போது இறுக்கமாக மூட மறக்காதீர்கள். மேலும் ஜிப் லாக் பையிலும் கூட சேமிக்கலாம். காற்று இல்லை என்றால் ஈரப்பதம் உள்ளே செல்ல முடியாது. இதனால் ஒப்பு மற்றும் சர்க்கரை கட்டியாவது தடுக்கப்படுகிறது.
36
அடுப்புக்கு அருகில் வைக்காதே!
உப்பு மற்றும் சர்க்கரை டப்பாவை அடுப்புக்கு அருகில் ஒருபோதும் வைக்க கூடாது. ஏனெனில் அங்கு தான் ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். எனவே அவற்றை கிச்சனில் உலர்ந்த இடத்தில் தான் வைக்க வேண்டும்.
உப்பு மற்றும் சர்க்கரை எடுப்பதற்கு செம்பு கரண்டிகளை ஒருபோதும் பயன்படுத்தவே கூடாது. ஏனெனில் இந்த கரண்டிகள் ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மையுடையது. எனவே இதை நீங்கள் பயன்படுத்தும் போது உப்பு மற்றும் சர்க்கரை கெட்டியாக மாறிவிடும். அதற்கு பதிலாக பிளாஸ்டிக் அல்லது மரக்கரண்டி பயன்படுத்தலாம்.
56
பச்சை மிளகாய்
உப்பில் ஈரப்பதம் சேரக்கூடாது என்றால், உப்பு டப்பாவில் சிறிது பச்சை மிளகாய் வைக்கவும். இது ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையுடையது. அதுபோல 2-3 கிராம்புகளை சர்க்கரை டப்பாவில் வைத்தால் சர்க்கரை கட்டியாக மாறாது.
66
கொண்டைக்கடலை மாவு அல்லது அரிசி
சர்க்கரை மற்றும் உப்பு ஒன்றோடு ஒன்று ஒட்டுவதை தவிர்க்க, அதனுள் சிறிது அரிசி அல்லது ஒரு ஸ்பூன் கொண்டைக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையுடையது.