எலுமிச்சை பழம் வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர இதில் தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும். இதனால்தான் எலுமிச்சையை ஜூஸாக குடிப்பது அல்லது அதன் சாற்றை உணவில் கலந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் இது அனைத்து பொருட்களுடன் சேர்ப்பதற்கு ஏற்றது அல்ல. இதனால் உடல் நலம் தான் பாதிக்கப்படும். எனவே எந்தெந்த உணவுகளுடன் எலுமிச்சை சேர்க்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
28
பால் பொருட்கள்
எலுமிச்சையில் சிட்ரிக் அமலம் இருப்பதால் பால், தயிர், பாலாடை கட்டி போன்ற எந்தவொரு பால் பொருட்களுடனும் இதை சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறினால் அமிலத்தன்மை மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
38
அதிக மசாலா உணவுகள்
எலுமிச்சை சாறுடன் அதிக மசாலா தொடர்புடைய உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக இறைச்சி, மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது எலுமிச்சை சாப்பிடவே கூடாது.
எலுமிச்சை ஜூஸூம், மோரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எப்படி பால் தயிருடன் எலுமிச்சை சாற்றை எடுத்துக் கொள்ளக் கூடாதோ அது போல தான் மோருடனும் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது இந்த கலவை செரிமானத்திற்கு நல்லதல்ல.
58
முட்டை
எலுமிச்சை ஜூஸ் உடன் முட்டை சாப்பிடக் கூடாது. ஏனெனில் எலுமிச்சை சாறு முட்டையில் இருக்கும் புரதத்தை கரைத்து விடும் மற்றும் முட்டையின் தன்மையையும் கெடுத்துவிடும். எனவே முட்டை உணவுகள் சாப்பிடும்போது எலுமிச்சை ஜூஸ் குடிக்கவே கூடாது அல்லது அதன் சாற்றை பயன்படுத்தக் கூடாது.
68
பழங்கள்
வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி, ஸ்ட்ராபெரி, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடும் போது லெமன் ஜூஸ் குடிக்கவே கூடாது. மீறினால் வயிற்று பூசம் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
78
தக்காளி
எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி இவை இரண்டிலும் அதிக அமில அளவு உள்ளதால் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் வயிற்றில் அமிலம் மேலும் அதிகரித்து நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
88
கேரட்
கேரட் சாப்பிடும்போது எலுமிச்சை சாறு குடிக்கக் கூடாது. ஏனெனில், கேரட்டில் இருக்கும் சில ரசாயனங்கள் எலுமிச்சையில் இருக்கும் வினைபுரிந்து வயிற்று வலி, வாயு, அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.