தேவையான பொருட்கள்:
இரண்டு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி. நீங்கள் புதிய நெல்லிக்காய் விழுதையும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயம், பத்து முதல் பதினைந்து செம்பருத்திப் பூக்கள், ஒரு கப் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேவை.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காய்ச்சவும். இதில் செம்பருத்திப் பூக்கள், இலைகள், வெந்தயம், நெல்லிக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இந்தப் பொருட்கள் அனைத்தும் கருமையாக மாறி, வாசனை வந்தவுடன், அடுப்பை அணைக்கவும். இதைச் சிம்மில் வைத்தே காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறிய பிறகு, வடிகட்டி காற்றுப் புகாத பாட்டிலில் சேமிக்கவும்.
எண்ணெய் பயன்படுத்தும் முறை:
வெந்தயம், நெல்லிக்காய், செம்பருத்திப் பூக்கள், இலைகளால் செய்யப்பட்ட இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, இளம் சூடாக்கிக் கொள்ள வேண்டும். கூந்தலில் நன்றாகத் தேய்த்து, ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து அல்லது இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் குளிக்க வேண்டும். மிதமான ஷாம்பூவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.