டீயை அதிக நேரம் கொதிக்க வைத்து குடிக்க கூடாது. அது ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பலருக்கும் டீ என்பது தவிர்க்க முடியாத பானங்களில் ஒன்றாகும். பலரும் காலை எழுந்தவுடன் ஒரு கப் டீவி என்றால் தங்களது நாளை தொடங்குகின்றனர். இருப்பினும் சிலர் அதன் சுவையை அதிகரிக்க அதை நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடிப்பார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடிப்பது சுவையாக இருந்தாலும், அது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். சரி இப்போது டீயை ஏன் அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
26
இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை :
நிபுணர்களின் கூற்றுப்படி, டீயை அதிக நேரம் கொதிக்க வைத்தால் அதில் உள்ள டானின் என்னும் பொருள் அதிகரிக்கும் .இது அதிகரித்தால் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுவது தடுக்கப்படும். இதனால் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை பிரச்சனை ஏற்படும்.
36
செரிமான பிரச்சினைகள்
பொதுவாக தேயிலைகளில் இயற்கையாகவே டானின்கள் இருப்பதால் நீங்கள் டீயை 5 நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைத்தால் டானின் உள்ளடக்கமானது அதிக அளவில் அதிகரித்து செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவிடும். அதுபோல நீண்ட நேரம் கொதிக்க வைத்த டீயில் pH அளவும் அதிகரித்து, அதிக அமலத்தன்மை கொண்டு தாக மாறிவிடும். இதன் காரணமாக வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
சிலர் ஒருமுறை தயாரித்த டீயை மீண்டும் மீண்டும் சூடாக்கி குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த பழக்கம் ரொம்பவே ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே தயாரித்து வைத்த டீயை மீண்டும் குடிக்க வைத்தால் அதில் இருக்கும் டானின் அளவு அதிகரித்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய ஆரோக்கியத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
56
ஊட்டச்சத்துக்கள் இழப்பு!
டீயில் பால் கலந்திருப்பதால் அதை கொதிக்க வைக்கும் போது பாலில் இருக்கும் புரதங்கள், கால்சியம், வைட்டமின் டி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும் அல்லது முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே ஊட்டச்சத்துக்கள் ஏதுமில்லாத பானத்தை குடிப்பது ஆரோக்கியத்திற்கு எந்தவித நன்மைகளும் இல்லை.
66
டீ போட சரியான முறை :
சரியான முறையில் டீ போட அனைத்து பொருட்களையும் சேர்த்த பிறகு சுமார் ஐந்து நிமிடம் மட்டுமே கொதிக்க வைத்தால் போதும். தேயிலை இலைகளை அதிகமாக பயன்படுத்தாமல் சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். டீ சரியான முறையில் தயாரித்தால் மட்டுமே அதை நன்றாக அனுபவிக்க முடியும். இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை தான் விளைவிக்கும். எனவே டீயை விரும்பி குடிப்பவர்கள் மேலே சொன்ன விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு, இனி சரியான முறையில் டீ போட்டு குடியுங்கள்.