Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!

Published : Jun 27, 2026, 02:04 PM IST

How to Cook Mutton Soft: மட்டன் சமைக்க அதிக நேரம் ஆகுதா? சில சமயம் எத்தனை விசில் விட்டாலும் கறி ரப்பர் மாதிரி கடினமாக இருக்கிறதா? கவலையை விடுங்க. உங்க வீட்டு மட்டனை ஹோட்டல் ஸ்டைலில் பஞ்சு போல வேக வைக்க, சூப்பர் டிப்ஸ் இதோ.

PREV
16
How to Cook Mutton Soft

ஞாயிற்றுக்கிழமை வந்தாலே நான்-வெஜ் பிரியர்கள் வீட்டில் கறி வாசனை கமகமக்கும். சிக்கனை விட மட்டன் குழம்புன்னா பலருக்கும் தனி பிரியம். ஆனால், மட்டன் சமைப்பதில் இருக்கும் பெரிய சிக்கல், அது சீக்கிரம் வேகாது. சிக்கன் சில நிமிடங்களில் வெந்துவிடும், ஆனால் மட்டன் வேக பல மணிநேரம் ஆகும். குறிப்பாக, முத்திப்போனஆட்டுக்கறியாக இருந்தால், எத்தனை விசில் விட்டாலும் சரியாக வேகாது. ஹோட்டல் ஸ்டைலில் மட்டனை பஞ்சு போல வேக வைப்பது எப்படி? இதோ சில எளிய டிப்ஸ்.

இதையும் படியுங்கள்:  வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!

26
1. வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பொதுவாக நாம் மட்டனை பச்சைத் தண்ணீரில் தான் கழுவுவோம். ஆனால், மட்டனை குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான (Lukewarm Water) நீரில் கழுவினால், அது சீக்கிரம் வேக உதவும். இந்த முறை, கறியின் நார்களை இளகச் செய்யும்.

இதையும் படியுங்கள்:  சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

36
2. கடினமான இறைச்சிக்கான தயிர் தாளிப்பு

நீங்கள் வாங்கிய மட்டன் கொஞ்சம் முத்தலாக இருந்தால், சமைக்கும் முன் மாரினேட் செய்வது முக்கியம். கறியைக் கழுவிய பின், சிறிது மஞ்சள், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, அரை கப் கெட்டித் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும். தயிரில் உள்ள அமிலம், கறியை மென்மையாக்கும். இப்படி செய்தால், எவ்வளவு கடினமான மட்டனும் வெறும் 10 நிமிடத்தில் வெண்ணெய் போல வெந்துவிடும்.

இதையும் படியுங்கள்:  சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?

46
3. எலுமிச்சை சாற்றின் மாயாஜாலம்

நீங்கள் வாங்கியது இளங்கறியாக (Tender Mutton) இருந்தால், அதிக நேரம் மாரினேட் செய்யத் தேவையில்லை. அந்தக் கறியைக் கழுவிய பிறகு, சிறிது எலுமிச்சை சாறு கலந்து 10-15 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். எலுமிச்சை சாறு, கறியின் புரோட்டீனை வேகமாக உடைக்க உதவும். இதனால் மட்டன் சீக்கிரமாக வெந்துவிடும்.

இதையும் படியுங்கள்:  ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!

56
4. சமைக்கும்போது எண்ணெய் பயன்படுத்துதல்

மட்டனை வேக வைக்கும்போது, அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய், வெப்பத்தை சீராகப் பரப்பி, கறியின் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை அப்படியே தக்க வைக்கும். இதனால் மட்டன் வறண்டு (Dry) போகாமல், சீராக வேகும்.

இதையும் படியுங்கள்:  இந்த 5 பொருட்களை மறந்தும் ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.! மீறினால் விஷமாக மாறுமாம்.!

66
5. பச்சையான பரங்கிக்காய் துண்டுகள்

மட்டன் சீக்கிரம் வேகுவதற்காக, பச்சை பப்பாளிக்காயின் (Raw Papaya) ஒரு சிறு துண்டையோ அல்லது அதன் தோலையோ கறியுடன் சேர்த்து வேக வைப்பார்கள். பப்பாளியில் உள்ள 'பப்பாயின்' (Papain) என்ற என்சைம், கறியை மிக வேகமாக மென்மையாக்கும் சக்தி கொண்டது. இனிமேல் மட்டன் வாங்கும்போது இந்த எளிய டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள். உங்கள் நேரமும் மிச்சமாகும், சமையலும் சுவையாக அமையும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories