Iron Box Cleaning Tips: அயர்ன் பாக்ஸ் அடியில் கறை படிஞ்சிருக்கா? புதுசு போல மாற்ற இதோ 6 எளிய வீட்டு டிப்ஸ்!

Published : Jun 27, 2026, 10:29 AM IST

Iron Box: அயன் பாக்ஸில் ஒட்டியிருக்கும் கறையை வீட்டில் இருக்கும் மிக எளிமையான 6 பொருட்களைக் கொண்டு அயர்ன் பாக்ஸ் கறைகளை எப்படி நொடியில் அகற்றுவது என்பது குறித்த ஈஸி டிப்ஸ்.

PREV
17
அயர்ன் பாக்ஸ்

நமது வீடுகளில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படும் அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் கறைகள் படிந்திருக்கும். இந்த கறைகளை அப்படியே விட்டால், நாம் அயர்ன் செய்யும் புத்தம் புதிய ஆடைகளிலும் ஒட்டிக்கொண்டு துணிகளைப் பாழாக்கிவிடும். ஆனால், நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அயன் பாக்ஸில் ஒட்டி இருக்கும் கறையை மிக எளிமையான முறையில் சுத்தம் செய்துவிடலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

27
பேக்கிங் சோடா

ஒரு ஸ்பூன் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து நன்றாகப் பேஸ்ட் போலக் குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் உள்ள கறைகளின் மேல் தடவி, சில நிமிடங்கள் ஊற விடவும். பிறகு, ஒரு ஈரத்துணியைக் கொண்டு துடைத்து எடுத்தால் கறைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

37
டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் பற்களை மட்டுமல்ல அயன் பாக்ஸில் ஒட்டி இருக்கும் கறையை போக்கவும் உதவுகிறது. இதற்கு அயன் பாக்ஸ் கரை மீது டூத் பேஸ்ட்டை தடவி நன்கு காய்ந்த பிறகு ஒரு துணியைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்தால் போதும். நல்ல மாற்றங்கள் காண்பீர்கள்.

47
வெள்ளை வினிகர்

அரை கப் தண்ணீருடன் அரை கப் வெள்ளை வினிகரைக் கலந்து ஒரு கலவையை உருவாக்கவும். இதில் ஒரு சுத்தமான காட்டன் துணியை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், அந்த துணியைக் கொண்டு அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியை நன்றாகத் தேய்த்துத் துடைத்தால், கடினமான கறைகளும் எளிதில் நீங்கிவிடும்.

57
உப்பு

ஒரு காகிதம் அல்லது தேவையில்லாத துணியின் மீது சிறிதளவு பொடி உப்பை தூவிக்கொள்ளுங்கள். பிறகு ஐயன் பாக்ஸ் மிதமான சூட்டில் இருக்கும் போது அதன் மீது நன்கு தேய்த்தால் அதில் ஒட்டி இருக்கும் கறையானது நீங்கிவிடும்.

67
ஐஸ் கட்டிகள்

அயன் பாக்ஸ் மிதமான சூட்டில் இருக்கும் போது அதன் மீது ஐஸ்கட்டிகளை பரப்பி வைத்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். கறையானது ஐஸ் கட்டி கரையும் போது அதனுடன் சேர்ந்து கறைந்து விடும்.

77
நெயில் பாலிஷ் ரிமூவர்

நகங்களில் இருக்கும் நெயில் பாலிஷை அளிப்பதற்கு நெயில் ரிமூவர் பயன்படுத்துவோம். அதுபோல அயன் பாக்ஸில் ஒட்டியிருக்கும் கறையை சுத்தம் செய்வதற்கும் இதை பயன்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories