இந்த நோன்பு கடைபிடிக்க முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையால் இல்லத்தை நிரப்ப வேண்டும். பின்னர் வீட்டின் ஈசானிய மூளையில் மண்டபம் ஒன்றை தயார் செய்து அதில் ஒரு கலசத்தில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசுகள் போன்றவற்றை இட்டு கலசத்தின் மேல் தேங்காய் வைக்க வேண்டும். பின்னர் தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகத்தினால் ஆன லட்சுமி உருவச் சிலையை அந்த தேங்காயில் கட்ட வேண்டும். மஞ்சள் சிரட்டில் குங்கும் வைத்து கலசத்தில் அணிவித்து வரலட்சுமி முகம் கிழக்குப் பக்கமாக இருக்குமபடி வைத்து வணங்க வேண்டும். தீபா ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களை படைப்பர். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சிரட்டை விரதம் இருந்தவர்கள் கையில் கட்டுவர். படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம் மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலிக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணா நோன்பு இருந்து விரதத்தை நிறைவேற்றுவர்.
மேலும் செய்திகள்...Aadi Perukku 2022 : வளங்களை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்!
மாலையில் அன்று முழுவதும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். மாலை வேலைகளில் அக்கம்பக்கம்வீடுகளுக்கு சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.