நல்ல மழை பெய்து பயிர்கள் செலுத்தி இருக்கும் மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் பெய்யும் பருவ மழையால் ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வழியும். இதன் அடிப்படையிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். ஆடி மாதத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம்.. இந்த கணக்கில்தான் தை தேதி பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என கூறியுள்ளனர்.