செல்வம் பெருக ஆடி பெருக்கு அன்று.. இந்த 5 பொருட்களை கட்டாயம் பூஜையில் வையுங்கள்!

First Published | Aug 2, 2022, 1:47 PM IST

ஆடி மாதத்தில் மிகவும் உயர்ந்த நாளாக கருதப்படும் ஆடி பெருக்கு , அன்று முக்கியமாக இந்த 5 பொருட்களை உங்கள் பூஜை அறையில் வைத்து வணங்குவது உங்கள் செல்வ வளத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
 

ஆடி பெருக்கு, தினம் நம்முடைய நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாகவே நம் ஒவ்வொரு ஆண்டும், நீர் நிலை உள்ள இடங்களான, ஆறு, கடல், தண்ணீர் தேக்கி வைக்கும் குளம் போன்ற இடங்களில் பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 

சூழ்நிலை காரணமாக ஆறு, குளங்களுக்கு போக முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே காவிரி தாயிக்கு நன்றி சொல்லும் விதமாக வீட்டில் உள்ள தண்ணீர் டேக், தண்ணீர் குழாய் போன்றவற்றிக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

மேலும் செய்திகள்: அட கடவுளே.. ரூ.76,000 கொடுக்காததால் விஜய் வாழ்ந்த வீட்டின் மீது சொத்து பறிமுதல் நடவடிக்கை- நீதிமன்றம் உத்தரவு!
 

Tap to resize

இப்படி வீட்டில் பூஜைகள் செய்யும் போது, பூஜை அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் கலந்து, பூ போட்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. 

ஆடி பெருக்கு தினத்தன்று, நீங்கள் எது வாங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது. எனவே சிலர் தங்கம், வெள்ளி போன்றவற்றை கூட வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.

மேலும் செய்திகள்: குழந்தையாக தொட்டிலில் தவழும் தளபதி விஜய்..! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் இதோ..!
 

ஆனால் சாமானிய மக்கள் பலரால், தங்கம் - வெள்ளி போன்றவை வாங்கி வழிபடுவது சாத்தியம் இல்லை. எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக கட்டாயம் இந்த 5 பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள்.
 

நாளைய தினம் மறக்காமல் கல் உப்பு, மஞ்சள், வெல்லம் (அ) சர்க்கரை, அரிசி, பருப்பு போன்றவற்றை மறக்காமல் வாங்கி உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். பின்னர் இந்த பொருட்களை நீங்கள் உங்களுடைய சமையல் பொருள்களில் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்: முதல் முறையாக குழந்தையின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரணீதா! அம்மாவை போல் கொள்ளை அழகு!
 

அதே போல், ஆடி பெருக்கு தினத்தில் நாவல் பழம் நெய்வேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு. முடிந்தால் நாவல் பழ நெய்வேத்தியதோடும்,  இந்த 5 பொருள்களோடும் பூஜை செய்து உங்களின் செல்வ வளத்தை பெருக்குங்கள்.

Latest Videos

click me!