புதுத் தாலி மாற்றுவது ஏன்?
ஏனெனில், ஆடி 18 அன்று மங்களத்தின் அடையாளமாக விசேஷமான நாளாக கருதப்படும் இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள், தாலி என்றழைக்கப்படும் மஞ்சள் கயிற்றை கணவர் கையால் மாற்றுகின்றனர். இந்த நாட்களில் தாலி பெருக்கி போடும் போது, நீண்ட நாட்களாக பெண்கள் மஞ்சள், குங்குமம், பூவும் பொட்டோடும் வாழ வேண்டும் என்பது ஐதீகம்.
மேலும் படிக்க....Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் சிறப்பு மாற்றம்..ஆக்ஸ்ட் 10 வரை உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...
பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு.