தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் (ஆகஸ்ட் 1 – 7) கொண்டாடப்படுகிறது.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது என்றால் அது மிகையல்ல. தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து போன்றவை கிடைப்பதுடன் முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது. எனவே, தாய்மார்கள் கட்டாயம் குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
28
Breast Feeding Week 2022:
சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சக்தி வாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.
38
Breast Feeding Week 2022:
பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள்:
1. இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம், அத்தி போன்ற பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும். இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம் போன்றவை உள்ளன. இவை இரத்தம் அதிகரிக்க உதவியாக உள்ளது.
2. நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்.
48
Breast Feeding Week 2022:
3. பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம்.
58
Breast Feeding Week 2022:
4. பூண்டு, வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும். நெய்யில் பூண்டை தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும்.
68
Breast Feeding Week 2022:
5. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவற்றில் அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியம் உள்ளது. இவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
6. நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.
88
Breast Feeding Week 2022:
7. வெந்தயம் பெண்களின் பால் சுரப்பு அதிகரிப்பதோடு, மாதவிடாய் பிரச்சனை முதல் கர்ப்பப்பை பிரச்சனை என அனைத்திற்கும் உதவியாக உள்ளது. எனவே, வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்கலாம்.