Milk: பாலை காய்ச்சாமல் குடிக்கலாமா? அப்படி குடித்தால் உடலில் என்ன மாற்றம் நிகழும்..!..நிபுணர்கள் விளக்கம்....

First Published Aug 1, 2022, 2:48 PM IST

Drink milk: பாலை  காய்ச்சாமல் குடிக்கலாமா?  அப்படி குடித்தால் என்ன பிரச்சனை வரும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்காக மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்ன தெரிந்து கொள்வோம். 

Drink milk

உலகம் முழுவதும் சத்தான ஆகாரங்களில் ஒன்றாக பால் எப்போதும் இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பால் குடிப்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. உடலுக்குத் அத்தியாவசியத் தேவையான கால்சியம் சத்து பால் மற்றும் பால் பொருட்களில் அதிகம் இருக்கிறது. ஆனால்
அத்தகைய பாலினை காய்ச்சி குடித்தால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஒருவேளை, அத்தகைய பாலினை காய்ச்சாமல் குடித்தாலும் அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அப்படி காய்ச்சாமல் குடித்தால் கூட என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

Drink milk

காய்ச்சாத ஒரு கப் பாலில் இருக்கும் சத்துக்கள்:
 
காய்ச்சாத ஒரு கப் பாலில் 149 கலோரிகள், 8 கிராம் புரோட்டீன்கள், 8 கிராம் கொழுப்பு, சர்க்கரை 12 கிராம், 12 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. இதுதவிர கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் காணப்படுகிறது. மொத்தத்தில் காய்ச்சிய ஒரு கப் பாலில் இருக்கும் சத்துக்களுக்கு நிகரான சத்துக்கள் காய்ச்சாத பாலிலும் உள்ளது. 
 

Drink milk

காய்ச்சாத ஒரு கப் பாலில் இருக்கும் நன்மைகள்:

1. காய்ச்சாத ஒரு கப் பாலில் இருக்கும் பொட்டாசியம் குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. எனவே, ரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம். 

2. காய்ச்சாத பாலை குடிக்கும் போது, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. 

3. எலும்புகள், பற்கள் உறுதிக்கு, தசைகளின் இயக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து அவசியமாகும்.  எனவே காய்ச்சாத பாலில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது.  

Drink milk

4. குழந்தை பருவ ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களும் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம். 

5. இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாகுலர் சிதைவில் இருந்து காப்பாற்ற உதவுகிறது. மேலும், பாலில் உள்ள லாக்டோஃபெரின், இம்யூனோகுளோபுலின், லைசோசைம் தீங்கு விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

click me!