Budhan Peyarchi: இன்று புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்கை...சூரியனைப் போல் பிரகாசிக்கும்..

First Published | Aug 1, 2022, 1:26 PM IST

Budhan peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் 1 ஆம் தேதி அதாவது இன்று புதன் கிரகம் தனது ராசியை கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாற்றும். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் அருளால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

budhan peyarchi 2022

புதன் பெயர்ச்சி 2022:

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து 12 ராசிகளின் மீது இருக்கும். புதன் கிரகம் தனது ராசியை மாற்றும்போது அதன் தாக்கம் வணிகம், பேச்சு மற்றும் பங்குச் சந்தையில் மாற்றம் நிகழும். அதன்படி, புதன் கிரகம் இன்று அதாவது ஆகஸ்ட் 1 ஆம் தேதி நள்ளிரவு 3:51 மணிக்கு தனது ராசியை கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாற்றுகிறது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை புதன் கிரகம் சிம்ம ராசியில் தங்கி அருள் பாலிப்பார். அதேபோல் புதன் கிரகம் அறிவாற்றல், புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், தகவல் தொடர்பு மற்றும் பேச்சாற்றலின் காரணியாக கருதப்படுகிறது. அந்தவகையில் புதன் கிரகத்தின் ராசி மாற்றம்  எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்...

budhan peyarchi 2022

மிதுனம்:

 மிதுன ராசிக்காரர்கள் பேபுதன் ராசி மாற்றத்தால், தொழிலில் வெற்றி பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்லுறவைக் கொண்டிருப்பீர்கள். தொழிலில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.  வியாபாரிகளுக்கு லாபகரமான சலுகைகள் கிடைக்கும். இந்த வேளையில் உங்கள் பேச்சாற்றல் மேம்படும். வருமானத்தைப் பெருக்கும் வழிகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.

மேலும் படிக்க...Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்...

Tap to resize

budhan peyarchi 2022

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் நன்றான விளைவுகளை பெறுவார்கள். புதன் கிரகத்தின் செல்வாக்கால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். உங்கள் பணி பாராட்டப்படும். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அதேபோல் கடினமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: 

சிம்மத்தில் சஞ்சரிக்கும் புதனால் கும்ப ராசிக்காரர்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை தேடும் மாணவர்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.சி வியாபாரிகளுக்கு அனுகூலமான காலமாகும். அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

budhan peyarchi 2022

மகரம்: 

சிம்மத்தில் புதன் பெயர்ச்சி உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும். புதன் சஞ்சரிப்பதால் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் கூடும். வியாபாரத்தில் வேகம் கூடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறலாம். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரிகளுக்கு இது சாதகமான நல்ல நேரம். அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க...Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்...

Latest Videos

click me!