ஆடிப்பூர வழிபாடு பலன்கள் :
இந்த நாளில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும், அம்பிகையை வணங்கி வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணமான பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூர வழிபாடு கோவில்கள்:
இந்த நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதோடு சிவன் கோவில்களிலும் அம்மனை அலங்கரித்து சிறப்பு வழிபாட்டு பூஜைகள், பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள், தேரோட்டமும் நடைபெறும். இந்த ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாமல், வைணவ (பெருமாள்) ஆலயங்களிலும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படக்கூடிய விழாவாகும்.
மேலும் படிக்க...Aadi Month 2022- Aadi 18: அற்புதங்கள் நிகழும் ஆடிப்பெருக்கின்....சிறப்புகளும், அதன் வழிபாட்டு முறைகள் என்ன..?