நன்மைகள்:
1. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.
2. தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில் கிடைக்கிறது . மேலும், குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுகள், சுவாசக் கோளாறுகள் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.