DIY Home Remedies to Clean and Polish Your Wooden Dining Table: தொடர்ந்து யூஸ் பண்றதால உங்க மர டைனிங் டேபிள் பழைய மாதிரி ஆகிடுச்சா? கெமிக்கல் இல்லாம ஈஸியா நீக்கி, டேபிளை புதுசு மாதிரி ஜொலிக்க வைக்கிறது எப்படினு பார்க்கலாம்.
ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணியில, 2-3 சொட்டு பாத்திரம் கழுவுற லிக்விட் சோப் சேர்த்து கலக்குங்க. இந்த தண்ணியில துணியை முக்கி, நல்லா பிழிஞ்சிடுங்க. துணி ஈரமா இருந்தா போதும், ரொம்ப சொதசொதன்னு இருக்கக் கூடாது. இத வெச்சு டேபிளை துடைங்க. பிசுக்கு இருக்கிற இடத்துல கொஞ்சம் அழுத்தி துடைக்கலாம். துடைச்ச உடனே, காய்ந்த துணியால ஈரம் போக துடைச்சிடுங்க.
சம அளவு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரைக் கலந்து, துணியால துடைச்சா பிசுக்கு கறை ஈஸியா போயிடும்.
கப் வெச்சதால உருவான தண்ணி கறையை போக்க, ஹேர் டிரையரை குறைஞ்ச சூட்டுல (Low heat) வெச்சு, கறை மேல சில இன்ச் தூரத்துல காட்டுங்க. கறை மங்கினதும், கொஞ்சம் ஃபர்னிச்சர் ஆயில் தடவுங்க.
தண்ணி கறை மேல ஒரு பருத்தித் துணியை வெச்சு, அதுக்கு மேல லேசா சூடு பண்ணின அயர்ன் பாக்ஸை சில நொடிகள் வெச்சாலும் கறை மறைஞ்சிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.