Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

Published : Jul 10, 2026, 04:55 PM IST

Aluminum vs Stainless Steel Pressure Cooker: புதுசா பிரஷர் குக்கர் வாங்க திட்டமா? அலுமினியம் குக்கர் நல்லதா, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர் நல்லதா? எது பாதுகாப்பானது, எது நீண்ட நாள் உழைக்கும்? உங்க எல்லா குழப்பத்துக்கும் இங்கே பதில் இருக்கு.

PREV
15
Aluminum vs Stainless Steel Pressure Cooker

இந்திய சமையலறைகள்ல பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை. ஆனா புதுசா குக்கர் வாங்கும்போது, அலுமினியம் வாங்குறதா ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாங்குறதான்னு பலருக்கும் குழப்பம் வரும். விலை குறைவு, சமையல் சீக்கிரம் முடியும்னு நிறைய பேர் அலுமினியம் குக்கரைத் தேர்ந்தெடுக்கிறாங்க. ஆனா, ஆரோக்கியம், ஆயுள்னு பார்த்தா, உண்மை வேற மாதிரி இருக்கு. இந்த ரெண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை இங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!

25
1. அலுமினியம் குக்கர்

இந்தியாவில் மக்கள் அலுமினியம் குக்கர்களைத்தான் அதிகம் பயன்படுத்துறாங்க. ஸ்டீல் குக்கரை விட இது விலை குறைவு, எடையும் கம்மி. அலுமினியம் உலோகம் சீக்கிரமா சூட்டை உள்ளிழுக்கும். இதனால குக்கர் சீக்கிரம் சூடாகி, சமையல் வேகமா முடியும். காலையில அவசரமா சமைக்கிறவங்களுக்கு இது நேரத்தை மிச்சப்படுத்தும். அலுமினியம் குக்கர்கள் சீக்கிரமே கருத்துப்போகும். அதுல கீறல்களும் (Scratches) சுலபமா விழுந்திடும். முக்கியமா, தக்காளி, புளி மாதிரி அமிலத்தன்மை உள்ள உணவுகளோட இது வினைபுரிய வாய்ப்பிருக்கு.

இதையும் படியுங்கள்:  Cleaning Tips: மிதியடியில் உள்ள முடி, அழுக்கை 5 நிமிஷத்துல ஈஸியா எடுக்கலாம்.! இதோ சிம்பிள் டிப்ஸ்.!

35
2. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர்

நீண்ட காலத்துக்கு உழைக்கணும்னு நினைச்சா, ஸ்டீல் குக்கர்கள்தான் பெஸ்ட். இது ரொம்ப உறுதியா இருக்கும். எத்தனை வருஷம் பயன்படுத்தினாலும் இதோட பளபளப்பு குறையாது, துருவும் பிடிக்காது. சுத்தம் செய்வது சுலபம், ஸ்டீல் குக்கர்களை கழுவுறது ரொம்ப ஈஸி. அலுமினியம் மாதிரி பிடிவாதமான கறையோ, கருப்போ இதுல அவ்வளவு சீக்கிரம் படியாது. முன்னெல்லாம் ஸ்டீல் குக்கர் சூடாக அதிக நேரம் எடுக்கும். ஆனா இப்போ வர்ற ஸ்டீல் குக்கர்கள்ல 'சான்ட்விச் பேஸ்' (Sandwich Base) தராங்க. இது சூட்டை சமமா பரப்பி, சமையலை வேகமா முடிக்க உதவுது.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!

45
பாதுகாப்புக்கு எது பெஸ்ட்?

நிபுணர்கள் சொல்றபடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர்தான் ஆரோக்கியத்துக்கு ரொம்ப பாதுகாப்பானது. ஸ்டீல் ஒரு நிலையான உலோகம். அதனால சமைக்கும்போது அது உணவோட எந்த ரசாயன வினையிலும் ஈடுபடாது. அலுமினியம் சத்து உணவு வழியா உடம்புக்குள் போகும் அபாயம் இல்லை. அதனால, ஆரோக்கியத்தை யோசிச்சா ஸ்டீல் குக்கர் 100% பெஸ்ட் சாய்ஸ்.

இதையும் படியுங்கள்:  Kitchen Sink: இரவு தூங்கச் செல்லும் முன் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போடுங்க.! இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

55
உங்க கிச்சனுக்கு எது சரி?
உங்களுக்கு விலை குறைவு மட்டும்தான் முக்கியம்னா, நீங்க அலுமினியம் குக்கரை தேர்ந்தெடுக்கலாம். ஆனா, ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பான, நீண்ட நாள் உழைக்கிற, எப்போதுமே புதுசு மாதிரி பளபளப்பா இருக்கிற குக்கர் வேணும்னா, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர்தான் உங்க முதல் தேர்வா இருக்கணும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories