வெறுங்காலில் நடந்தால் நன்மை உண்டா?
- செருப்பு அணியாமல் தினமும் சிறிது நேரம் வெறுங்காலில் நடப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. உண்மையில் வெறுங்காலுடன் நீங்கள் நடந்தால் கால்கள் வலுப்பெறும். இரத்த ஓட்டம் மேம்படுகிறது. சமதளமற்ற பரப்புகளில் நடக்கும்போது கால்களில் ஏற்படும் அழுத்தம் உடலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வெறுங்காலில் நடப்பதால் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
- தினமும் வெறுங்காலில் நடந்தால் உங்களுடைய தோரணை மாறும். உடலுக்கு சமநிலை கிடைக்கும். தரையில் நேரடியாக கால்கள் படுவதன் மூலமாக பாதங்களில் சமநிலையும் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி உங்களுடைய தொடை தசைகள் இறுகும். வெறுங்காலில் நடப்பதால் உங்களுடைய கால்களின் அனைத்து தசைகளும் ஒன்றாக செயல்பட்டு வலுப்பெறுகின்றன.
- நீங்கள் வேகமாக நடப்பதற்கு வெறுங்காலுடன் நடப்பது உதவியாக இருக்கிறது. வெறுங்காலுடன் நடப்பது உங்களுடைய நடை வேகத்தையும், நகரும் வசதியையும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி முழங்கால்கள், இடுப்பு, உடலின் மையப்பகுதியில் நல்ல இயக்கம் இருக்கும். பொருத்தமற்ற காலணிகளை அணிந்து நடப்பது தேவையில்லாத வலிகளை தரும். வெறுங்காலில் நடந்தால் அந்த பிரச்சனை வராது.