
இரவில் புரண்டு புரண்டு படுத்தும் உங்களால் தூங்க முடியவில்லையா? ஆம் எனில், இதற்கு உங்களது உணவு பழக்கம் தான் முக்கிய காரணமாகும். உண்மையில், நீங்கள் இரவு சாப்பிடும் சில உணவுகள் உங்களது தூக்கத்தை தொந்தரவு செய்யும். அதுமட்டுமின்றி, அவை உங்களது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இந்த பதிவில் சில உணவுகளை பற்றி சொல்ல போகிறோம். அவை பகலில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், இரவில் அவற்றை சாப்பிட்டால் தீங்கு தான் விளைவிக்கும். அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
டீ & காபி:
நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இரவு தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் டீ அல்லது காபி குடித்தால் உங்களது தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில் அவற்றில் இருக்கும் காஃபின் உங்களது தூக்கத்தை கெடுக்கும். எனவே நீங்கள் தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் இவற்றை குடிக்க வேண்டாம். வேண்டுமானால் மூலிகை டீ குடிக்கலாம்.
மசாலா உணவுகள்:
இரவு உணவில் அதிக எண்ணெய் அல்லது காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டால் அமில பிரச்சினை, நெஞ்செரிச்சல் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இதனால் உங்களது தூக்கம் களைக்கப்படும். எனவே இரவு நேரத்தில் லேசான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! காரணம் தெரியுமா..?
இனிப்புகள்:
இரவு தூங்கும் முன் இனிப்பு சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். இதனால் நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம். ஏனெனில் இனிப்பு அதிகளவு ஆற்றலை உருவாக்கும். இதனால் தூங்குவதில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமின்றி இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே சிறந்த தூக்கத்திற்காக இரவு தூங்குவதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இனிப்பு உணவுகள் எதையும் சாப்பிட வேண்டாம்.
மதுபானம்:
மதுபானம் அருந்தினால் உடனே தூக்கம் வரும். ஆனால் ஆழ்ந்த தூக்கம் அல்ல அதாவது நீங்கள் மது அருந்திய உடனே தூங்கினாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உங்களது தூக்கம் தடைப்படும். இதனால் நீங்கள் அடுத்த நாள் காலை மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
இதையும் படிங்க: இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடும் நபரா..? உங்களுக்கு பக்கவாதம் வருவது கன்பார்ம்..!!
தயிர்:
தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அது பகலில் சாப்பிடுவது தான் நல்லது. இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். முக்கியமாக அதன் குளிர்ச்சி தன்மையால் சளி, வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
சிக்கன்:
கோழியில் அதிகளவு புரதம் உள்ளதால், இது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே சிக்கனை இரவில் சாப்பிடுவதே தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், உங்களது தூக்கம் சீர்குலைந்து விடும்.
கொழுப்புள்ள உணவுகள்:
இரவில் அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செரிமான அமைப்பு இரவு நேரத்தில் குறைவாக செயல்படுவதால், கொழுப்புள்ள உணவை இரவு நேரத்தில் சாப்பிட்டால் செரிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். எனவே முடிந்த அளவிற்கு கொழுப்புள்ள உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உலர் பழங்கள்:
உலர் பழங்களில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சர்க்கரை வைட்டமின்கள் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. எனவே அவற்றை காலையில் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவே நீங்கள் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் உங்கள் தூக்கம் சீர்குலைந்து விடும்.