
பொதுவாகவே நாம் சிரிக்கும் போது பார்க்கவே வெள்ளையாக இருந்தால் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும். அதுமட்டுமின்றி, நாம் சிரிக்கும் போது நமக்கு எதிரில் இருப்பவர்களின் கண்ணில் முதலில் படுவது நம்முடைய பல் தான். ஒருவேளை பற்கள் கறை படிந்து மஞ்சள் நிறத்தில் இருந்தால் வாய்விட்டு சிரிக்க முடியாமல் போகும். இதற்காக பற்கள் வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ஆரோக்கிய கேட்டை குறிக்கிறது.
பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கான காரணங்கள்:
டீ, காபி, சோடா, அல்கஹால் போன்ற பிற காரணங்களால் தான் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது என்றாலும், இவை அனைத்தையும் குடித்த பிறகு நீங்கள் பற்களை வெந்நீரில் கொப்பளித்தால் கூட பற்களில் மஞ்சள் கறை படிந்து விடும். இது தவிர புகையிலை பான் மசாலா போன்றவை பற்கள் நிறம் மாறுவதற்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில், மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பல் ஈறுகளில் இரத்தம் கசிவா? அப்ப தினமும் காலை 'இத' செய்ங்க..
ஆரஞ்சு தோல்:
ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் இருக்கிறது. இது பற்களில் உள்ள மஞ்சள் கறையை குறைக்க உதவும். இதற்கு முதலில் ஆரஞ்சு தோலை எடுத்து உங்கள் பற்களின் மெதுவாக தேய்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வாரத்திற்கு 2-3 முறை இப்படி செய்யலாம்.
வாழைப்பழத் தோல்:
வாழைப்பழத் தோலில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை பற்களை வெண்மையாக்கும். இதற்கு முதலில் வாழைப்பழத் தோலின் உட்புறத்தை உங்கள் பற்களில் மெதுவாக தேய்க்க வேண்டும். 2-3 நிமிடங்கள் கழித்து சூடான நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும் இந்த முறையை நீங்கள் தினமும் செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை மறையும்.
உப்பு:
உப்பில் இயற்கையாகவே சுத்திகரி பண்புகள் உள்ளன இது பற்களில் இருக்கும் கரையை அகற்றி, வெண்மையாக உதவுகிறது. இதை பயன்படுத்தும் முறையானது, டூத் பேஸ்ட்டில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் பிரஸ் செய்து வந்தால் பற்களில் பணிந்து இருக்கும் மஞ்சள் கரை குறைய ஆரம்பிக்கும். இந்த முறையை நீங்கள் தினமும் செய்ய வேண்டாம். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் செய்தால் போதும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்ற 'ஜீரோ' கெமிக்கல் பல்பொடி'.. 10 கிராம்பு இருந்தா வீட்டில் தயார் செய்யலாம்!!
சமையல் சோடா:
பேக்கிங் சோடாவில் இருக்கும் சிராய்ப்பு பண்புகள் பற்களில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. இதற்கு ஒரு சிட்டிகை அளவு பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை உங்கள் பற்களில் தடவி 2 நிமிடம் தேய்த்து பிறகு வாயை கொப்பளிக்க வேண்டும். வாரத்திற்கு 1 முறை மட்டும் இதை செய்தால் போதும். இல்லையெனில் உங்களது ஈறுகள் பலவீனமடைந்துவிடும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை போக்க உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது பற்களில் வைத்து, 2 நிமிடம் மெதுவாக தேய்க்க வேண்டும் பிறகு தண்ணீரால் வாயை கொப்பளிக்கவும். இந்த முறையை நீங்கள் மாதத்திற்கு 2 முறை மட்டும் செய்தால் போதும். இல்லையெனில் உங்களது பற்களில் இருக்கும் எனாமல் போய்விடும்.