
வாய் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைய நவீன உலகில் பலர் வெண்மையான பற்கள், புத்துணர்ச்சியான சுவாசத்திற்கு மவுத்வாஷ் பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் மவுத்வாஷ் அவர்களது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி சொல்லப்போகிறோம்.
அதாவது சமீபத்தில் வெளிவந்த ஆய்வு ஒன்றில், தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுவதாக சொல்லுகின்றன. ஆம், இதுவரை பெரும்பாலானோர் மவுத் வாஷிங் நன்மைகளைப் பற்றி தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்புகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, தொடர்ந்து மவுத்வர்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உங்கள் பற்கள் வெண்மையாக மாறனுமா? அப்போ கண்டிப்பா இந்த பழங்களை சாப்பிடுங்க..!!
வாயை உலரச் செய்யும்:
மவுத்வாஷ் வாயில் துர்நாற்றத்தை நீக்கவும், பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும் பெரிதும் உதவுகிறது. ஆனால் அதை அத்தொடர்ந்து பயன்படுத்தினால் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் தெரியுமா? ஏனெனில் பெரும்பாலான மவுத்வாஷ்களில் அல்கஹால் தான் இருக்கிறது. இது வாயில் வறட்சியை ஏற்படுத்தும்.
வாயில் எரிச்சல், வலி ஏற்படுத்தும்:
ஆல்கஹால் கொண்ட மவுத்வாஷை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களது வாயில் எரிச்சல், மற்றும் வலி ஏற்படும். இந்த பிரச்சனையை நீங்கள் உடனே சரி செய்யவில்லை என்றால் மோசமாக வாய்ப்பு உள்ளது.
பற்களில் கறை படியும்:
மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பற்களில் கறை படியும். ஏனெனில் இருக்கும் சில பொருட்கள் படிப்படியாக அவற்றின் விளைவை பற்களில் தான் காட்டுகின்றன. இதனால்தான் பற்களில் கறை காணப்படுகிறது.
புற்று நோய் வரலாம்:
2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு வாய், கழுத்து, தலைப்பகுதியில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளன. எனவே நீங்கள் மவுத்வாஷ் பயன்படுத்த விரும்பினால் அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: பல் தேய்க்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடித்தால் நினைத்து பார்க்க முடியாத பலன்கள்!!
சர்க்கரை நோய்:
பல ஆய்வுகளின் படி, ஒரு நாளைக்கு 1-2 மேல் மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கண்டறிந்துள்ளன. இதற்கு மவுத்வாஷில் இருக்கும் சில ரசாயன பொருள்கள் தான் காரணம். அவை இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கும் காரணியாக இருக்கிறது. இன்சுலின் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோன். எனவே இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படும்போது சர்க்கரை நோய் வரும்.
நினைவில் கொள்:
நீங்கள் மவுத்வாஷ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டாம். ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட பல் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு நீங்கள் மவுத்வாஷ் பயன்படுத்துங்கள்.