
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சீரான வாழ்க்கையை வாழ்வது கடினமாக உள்ளது. நேர மேலாண்மையை முறையாக கையாள்வது பலருக்கும் முடியாத காரியமாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான வேலைகளை செய்வதற்கே ஒவ்வொருவருக்கும் நேரம் இருக்கிறது. இதனால் வாழ்க்கை தரத்தை, ஆரோக்கியத்தை மேம்படுத்த நேரத்தை செலவிட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். நேரத்தைத் திறம்பட கையாள 8+8+8 விதி உதவும்.
அதென்ன 8+8+8 விதி?
உங்களுடைய 24 மணி நேரத்தை 8+8+8 என மூன்று பகுதிகளாக பிரிப்பது நேரத்தை திறம்பட செலவழிக்க உதவும். இதையே 8+8+8 விதி என்கிறார்கள். இந்த நேரத்தில் எப்படி வேலைகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: இந்த விஷயங்களில் ஒருபோதும் அவசர முடிவு எடுக்காதீங்க...பின்னாடி வருத்தப்படுவீங்க...
8 மணி நேர வேலை:
இந்த நேரம் உங்களுடைய உற்பத்தி நேரம் என சொல்லப்படுகிறது. இதில் கல்வி, வேலை, தொழில் ஆகியவை செய்யலாம். உங்களுடைய தனிப்பட்ட இலக்குகள், வேலை போன்றவற்றிற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓய்வுக்கு 8 மணி நேரம்:
உங்களுடைய ஓய்வுக்கு 8 மணி நேரத்தை நீங்கள் அவசியம் ஒதுக்க வேண்டும். இந்த நேரம் எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் மனதை அமைதிப்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் அவசியமானது. இதற்கென 7 முதல் ஒன்பது மணி நேரம் வரை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
தனிப்பட்ட விஷயங்களுக்கு 8 மணி நேரம்:
உங்களுடைய 3F-களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். குடும்பம் (Family), நண்பர்கள் (Friends), நம்பிக்கை (Faith) ஆகியவை தான் 3F ஆகும். அதைப் போல 3H-களுக்கு கவனம் அளிக்க வேண்டும். அவை ஆரோக்கியம், சுகாதாரம், பொழுதுபோக்கு ஆகியவை. 3S என சொல்லப்படும் ஆன்மா, சேவை, புன்னகை இவற்றை அன்றாடம் செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு நேரம் கொடுப்பது அவருடைய நாளில் இன்றியமையாத பகுதியாகும். உங்களுடைய விருப்பமான செயல்களை செய்ய, நீங்கள் நேசிக்கும் நபர்களுடன் நேரம் செலவிட இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும். ஓய்வு நேரத்திற்கு முன் புத்தகம் வாசிப்பது, தியானம் செய்வது ஆகியவற்றை செய்யலாம். ஆனால் தூங்கும் முன் டிவி, செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: Tips to Live 100 Years: 100 ஆண்டுகள் வாழ எளிய வழிகள்!
8+8+8 விதி நன்மைகள்:
- உங்களுடைய நேரத்தை சிறப்பாக செலவிட இந்த விதி உங்களுக்கு பயன்படுகிறது. வேலை, தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவற்றிற்கு நேரத்தை முறையாக ஒதுக்குவதன் மூலமாக நீங்கள் உங்களுடைய உறவையும், அதே நேரத்தில் தொழிலையும் கவனித்துக் கொள்ள முடியும்.
- உங்களுடைய வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரத்தை செலவிடுவதால் உங்களுடைய மன அழுத்தம் குறைகிறது. இதனால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.
- சரியான நேரத்திற்கு ஓய்வெடுத்து நிதானமாக வேலை செய்வதால் உங்களுடைய உற்பத்தி திறன் அதிகரிக்கும் உங்களுடைய வேலையும் திறம்பட செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது.
- 8+8+8 விதி சொல்வதற்கு எளிய விஷயமாக இருந்தாலும் அதை செயல்படுத்துவது சற்று கடினம்தான். உங்களுடைய நேரத்தை சிந்தித்து பயன்படுத்துவதால் ஓய்வு, வேலை, தனிப்பட்ட விருப்பங்கள் (personal desires and space) ஆகியவை சமமாக பிரிகின்றன. இதனால் குடும்பம், தொழில், தனிப்பட்ட விஷயங்களை உங்களால் சமநிலையில் கையாள முடியும். இது ஒரு மனிதனை பண்படுத்தும்.