உங்க குழந்தைக்கு '3' வயசு ஆச்சா?அப்போ கண்டிப்பா இந்த '6' பழக்கங்களை சொல்லிக் கொடுங்க!!

Published : Jan 07, 2025, 03:07 PM IST

Good Manners for Kids : ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைக்கு 3 வயது ஆன பிறகு அவர்களுக்கு கண்டிப்பாக சில நல்ல பழக்கங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

PREV
15
உங்க குழந்தைக்கு '3' வயசு ஆச்சா?அப்போ கண்டிப்பா இந்த '6' பழக்கங்களை சொல்லிக் கொடுங்க!!
parenting tips in tamil

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், குழந்தை பருவத்தில் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் விஷயங்கள் அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, குழந்தை வளர்ப்பில் குழந்தைகளுக்கு நல்ல நடத்தை மற்றும் மதிப்புகளை கற்பிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தை பருவத்தில் அவர்கள் ரொம்பவே விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். மேலும் சில சமயங்களில் அவர்கள் சில தவறான நடத்தியையும் இந்த வயதில்தான் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை ஆரம்பத்தில் இருந்து பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

25
Basic Manners for Kids in Tamil

நல்ல மற்ற கெட்ட பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் மூலம் உங்கள் குழந்தை நல்ல முறையில் வளருவார்கள். மேலும் அவர்கள் யாருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அதன் மூலம் அறிந்து கொள்வார்கள். குழந்தை வளர்ப்பில் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், மதிப்புகள் அவர்கள் எப்படி வளர்ந்து இருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கின்றன. சில சமயம் சில குழந்தைகள் ஒழுக்கம் இல்லாமல் இருப்பதால் பெற்றோர்கள் தான் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, உங்கள் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டுமானால், அவர்களுக்கு 3 வயது ஆன பிறகு சில முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குழந்தையை ஒழுக்கமா வளர்க்கிறோம்ங்கற பேர்ல பெற்றோர் செய்யும் '5' தவறுகள்!!

35
Good Manners for Kids in tamil

தயவுசெய்து, நன்றி மற்றும் மன்னிக்கவும்: 

இந்த மூன்று விஷயங்களையும் குழந்தை பருவத்தில் இருந்து உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது மிகவும் முக்கியம். இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றும் எந்த சந்தர்ப்பத்தில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். குழந்தை பருவத்தில் இந்த பழக்கங்களை குழந்தைகளுக்கு புகட்டினால், எதிர்காலத்தில் அவர்கள் அதை எதிர்காலத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.

அனுமதி கேட்க பழக்கப்படுத்துங்கள்:

ஒருவரது பொருளை எடுப்பதற்கு முன் அல்லது தொடுவதற்கு முன் அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்லுங்கள். அனுமதியின்றி பிறருடைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லுங்கள். அதுபோல ஒருவரது அறைக்கு செல்லும் முன் கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்கு சொல்லுங்கள்.

45
Importance of good manners for kids in tamil

பேசும் முறையை கற்றுக் கொடுங்கள்:

கத்துவது, கோபப்படுவது, சத்தம் போடுவது சரியல்ல என்றும், ஒரு விஷயத்தை குறித்து எவ்வளவு கோபமாகவோ, வருத்தமாகவோ இருந்தாலோ அதை அன்பாக பேசும்படி, தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள்.

பிறர் வார்த்தைகளை மதிக்கவும்:

ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் தனது வார்த்தைகளை முடித்த பிறகே, உங்களது கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

55
Tips for teaching good manners to kids in tamil

பிறரை கேலி செய்வது நல்லதல்ல:

குழந்தை பருவத்தில் இருந்து இந்த பழக்கத்தை உங்கள் குழந்தைக்கு சொல்லி கொடுத்தால் அவர்கள் வளர வளர அதையே பின்பற்றுவார்கள்

சுத்தத்தின் முக்கியத்துவம்:

உங்கள் குழந்தை இருமும் போதும் அல்லது தும்பும்போது கைகுட்டைகள் வாயை மூடிக்கொள்ளும்படி சொல்லிக் கொடுங்கள். மேலும் குழந்தையின் பாக்கெட்டில் எப்போதும் கை குட்டியை வைக்கவும்.

இதையும் படிங்க:  உங்க குழந்தை வீட்டில் சும்மா இருக்காங்களா? பிஸியா வைக்க இதோ '6' வழிகள்!

Read more Photos on
click me!

Recommended Stories