
தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது. குளிர்காலம் வந்தாலே சொல்ல வேண்டாம், வீசும் குளிர்ந்த காற்று நம்முடைய உடலை நடுங்க வைக்கும். வீட்டிற்கு வெளியே தான் குளிர் என்று நாம் நினைத்தால், தற்போது வீடு முழுவதும் குளிராக தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த வருடத்தின் குளிர் நம்மை வாட்டி வதைக்கிறது. பைப்பை திறந்து தண்ணீரைத் தொட முடியாத அளவிற்கு அவ்வளவு ஜில்லென்று இருக்கிறது.
என்னதான் ஆனாலும் இந்த குளிர் காலத்திலும் வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம். வீட்டை சுத்தமாக வைப்பது அடிப்படையான விஷயம் தரையை துடைப்பது தான். அதுவும் குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் தரையை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இல்லையென்றால், தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படும்.
இதையும் படிங்க: ஒரே ஒரு பொருள் போதும்.. இதை போட்டு வீட்டை துடைத்து பாருங்க.. எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லை கிடையாது
ஆனால், வீடு ஏற்கனவே ஜில்லென்று இருக்கிறது அப்போ எப்படி தண்ணீரை கொண்டு வீட்டின் தரையை சுத்தம் செய்வது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் வீட்டின் தரையை சுத்தமாக வைக்க விரும்பினால் தண்ணீரை பயன்படுத்தாமல் துடைக்கலாம் தெரியுமா? இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆம், தண்ணீர் இல்லாமல் வீட்டின் தரையை துடைப்பது சாத்தியம்தான். அதற்கு சரியான முறைகள் மற்றும் கருவிகளை மட்டும் பயன்படுத்தினால் போதும். அது சாத்தியமாகிவிடும். சரி இப்போது தண்ணீரெனாமல் வீட்டின் தரையை சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: வீடு துடைக்கும் தண்ணீரில் இத கலந்து பாருங்க.. வீட்டின் தரை மின்னும்!
உலர் மைக்ரோஃபைபர்:
குளிர்காலத்தில் வீட்டின் தரையை தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். இதைக் கொண்டு வீட்டின் தரையில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை சுலபமாக நீக்கிவிடலாம். இது அதன் முன்னேற்றத்தின் மூலம் தரையில் இருக்கும் தூசியை சுத்தம் செய்கிறது. மேலும் இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. முக்கியமாக இதை பயன்படுத்துவதன் மூலம் தரையை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கலாம். இது தவிர, நீங்கள் அடிக்கடி தரையை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
வாக்யூம் கிளீனர்:
குளிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் தரையை சுத்தம் செய்வதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தரையில் இருக்கும் தூசி மற்றும் சின்ன சின்ன குப்பைகளை எளிதில் அகற்றி விடும். அதுவும் குறிப்பாக வீட்டில் இருக்கும் ப்ளோர் மேட்டை சுத்தம் செய்வதற்கு இது சிறந்த வழி. இது வீட்டின் தரையை மிக விரைவாக சுத்தம் செய்கிறது மற்றும் நாம் அதிகம் உழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ட்ரை கிளீனிங் ஸ்பிரே:
தற்போது தரையை சுத்தம் செய்வதற்கு ட்ரை கிளீனிங் ஸ்ப்ரே சந்தையில் விற்கப்படுகின்றன. இதை நீங்கள் வாங்கி லேசாக தரையில் அடித்து பிறகு சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது உங்கள் தரை சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். எனவே இந்த குளிர் காலத்தில் உங்கள் வீட்டின் தரையை தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்வதற்கு உடனே இதை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.
பழைய கிச்சன் டவல்:
உங்கள் வீட்டில் பழைய கிச்சன் டவள் இருந்தால் அதை வைத்து வீட்டின் தரையை சுத்தம் செய்யலாம். இதற்கு அதை லேசாக தண்ணீரில் நனைத்து பிறகு அதைக் கொண்டு தரையை சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறை ரொம்பவே எளிதானது.