
இதயத்தின் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியம். காரணம் இதயத்தில் ஏற்படும் சிறு பிரச்சனை கூட சில நேரங்களில் உயிர் போகும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தும்.குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் உங்களின் இதய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் இதய ஆரோக்கியத்திலும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதயம் தான் நம் ரத்த ஓட்டத்தை சீராக இருக்க, குறிப்பிட்ட உங்களுக்கு உட்கொள்வதை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், கண்டிப்பாக குறைந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே இந்த 5 உணவுகளையும் அளவாக கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. சரி இதய ஆரோக்கியத்திற்கு நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுகளை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்:
எண்ணெயில் அதிகம் பொறிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா, சிக்கன், மீன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும். அதே போல் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் மீண்டும் பொறிக்கும் போது அந்த எண்ணையின் மூலம் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது எனவே இதை தவிர்ப்பது சிறந்தது. சில சமயங்களில் நம்மையும் மீறி பொறித்த உணவுகளை சாப்பிடும் ஆசை வரும். அது போன்ற நேரங்களில், வெளியிடங்களில் விற்கும் பொறித்த தின்பண்டங்களை பதிலாக வீட்டில் செய்து கொடுக்க சொல்லியோ, அல்லது வீட்டில் நீங்களே செய்து சாப்பிடுங்கள். இது உங்களது உடல்நல பெரிதாக பாதிக்காது.
உயரமான தலையணை வச்சி தூங்குனா இந்த பிரச்சினைகள் வருமா? அவசியம் படிங்க.!!
சர்க்கரை நிறைந்த உணவுகள்:
சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்து கொள்ளவும். இனிப்பு சேர்த்த பண்டங்கள் மட்டும் தான் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது கிடையாது. நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் உணவுகள், அதாவது அரிசி சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளும் சர்க்கரையின் அளவை கூடுதலாக்கும். அதே போல் பேக்கரி ஐட்டம்ஸ் என கூறப்படும் பிரட், கேக், போன்ற உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
உப்பு நிறைந்த உணவுகள்:
இதயத்தை கெடுப்பதில் மூன்றாவது இடத்தில் உள்ளது, அதிகம் உப்பு நிறைந்த உணவுகள். சிலருக்கு உப்பு அதிகம் சேர்த்த உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்படி உப்பு அதிகமாக எடுத்து கொள்வதால், உண்டால் இதய ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படும், என்பது உங்களுக்கு தெரியுமா? உப்பு அதிகமாக எடுக்கும் போது, நம் உடலில் பிபி அதிகரிக்கும். அதேபோல் உப்பு அதிகரிக்கும் போது இதயம் ஆட்டேமேடிக்காக தானாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பிபி உள்ளவர்கள் உணவில் அரை உப்பு மட்டுமே சேர்த்து கொள்வது சிறந்தது. ஊறுகாய், அப்பளம், சால்ட் அதிகம் கலந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
முகம் ஜொலிக்க! வறண்ட சருமம் இருக்கவங்க செய்யக் கூடாத '4' தவறுகள்!
குளிர்பானங்கள்:
நான்காவது இடத்தில் இருப்பது, செயற்கை குளிர் பானங்கள். தாகத்திற்காகவும் சுவைக்காகவும் சிலர் விதவிதமான நிறங்களில் விற்கப்படும் குளிர்பானங்களை வாங்கி அருந்துகின்றனர். இவை உங்களின் இதயத்தை மட்டும் அல்ல கல்லீரல் போன்ற உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும். கோடை காலங்களில் சில் என ஏதாவது குடிக்க தோன்றினார் மோர், இளநீர், பழ சாறு போன்றவற்றை குடிக்க பழகி கொள்ளுங்கள் இது உங்களின் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
ஆல்கஹால்:
இறுதியாக இதயத்தை கெடுக்கும் பொருட்கள் லிஸ்டில் உள்ளது அல்கஹால் தான். மது அருந்துவது அவரின் பிபி அளவை அதிகரிக்கும். இதனால் பிளட் வெஸில் அதிகம் பாதிக்கப்படும். தொடர்ந்து இப்படியே நடப்பது உங்களின் இதயத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, மது அருந்துவதை முழுமையாக தவிர்க்கவில்லை என்றாலும் உங்களின் இதய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குறைந்து கொள்ளுங்கள்.
பெற்றோர்களே இது உங்களுக்கு தான்;ஆங்கிரி பேட் போல் கோவப்படும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?