
நாள் முழுவதும் வேலை வேலை என்று களைத்து போயிருப்போம். எனவே அந்த களைப்பை போக்க தூக்கம் நமக்கு மிகவும் அவசியம். நாம் நிம்மதியாக தூங்கும் போது தான் நாள் முழுவதும் சேதமடைந்த செல்கள் சரி செய்யப்படுகின்றது, மன அழுத்தத்தில் இருந்தும் நிவாரணம் கிடைக்கின்றது மற்றும் தசைகளுக்கும் ஓய்வு கிடைக்கின்றது. ஆனால், சில சமயம் நம்முடைய தவறான தூக்கப்பழக்கமானது நம்மை நோய்களை நோக்கி அழைத்துச் செல்கின்றது. அவற்றில் ஒன்றுதான் உயரமான தலையணையை வைத்து தூங்குவது. இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால் உடனே இந்த பழக்கத்தை மாற்றி விடுங்கள். இல்லையெனில் நீங்கள் எதிர்காலத்தில் பல ஆபத்தான் நோய்களால் பாதிக்கப்படுவீர்கள். எனவே இப்போது உயரமான தலையணை வைத்து தூங்குவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பப்பை வாய் பிரச்சனை:
தற்போது பெரும்பாலான பெண்கள் இந்த கர்ப்பப்பை வாய் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உயரமான தலையணை வைத்து தூங்குவது தான். நீங்களும் உயரமான தலையணையில் தூங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கும் கர்ப்பப்பை வாய் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இந்த பிரச்சனை வந்தால் உங்களது தினசரி வேலையை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். சில நேரங்களில் இதனால் கடுமையான வலியை கூட உணர்வீர்கள். இது தவிர தலைசுற்றல் போன்ற பல பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கும்.
முகப்பரு பிரச்சனை அதிகரிக்கும்:
உயரமான தலையணை வைத்து தூங்கும் போது உடலில் ரத்த ஓட்டம் மோசமாக பாதிக்கப்படும். தலை மற்றும் முகத்தில் ரத்த ஓட்ட பிரச்சனை ஏற்படும். இதன் விளைவாக முகத்தில் துளிகள் பாதிக்கப்பட்டு முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: ஆழ்ந்த தூக்கம் வரலயா? இந்த 5 தவறுகள் தான் காரணம்!! உடனே மாத்துங்க!!
ஸ்லிப் டிஸ்க் பிரச்சனை வரும்:
ஸ்லிப் டிஸ்க் பிரச்சனை என்பது ஒரு நபரால் சரியாக நடக்கவும் அல்லது நிற்கவை கூட முடியாது. இந்தப் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் உயரமான தலையணையில் தூங்குவது தான். ஆம், உயரமான தலையணையில் தூங்கும் போது சரியாமல் தூங்க முடியாமல் போகிறது. மேலும் முதுகு தண்டுவடத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. இது ஸ்லிப் டிக்ஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையால் கழுத்து, முதுகு, தோள்களில் வலி அதிகம் ஏற்பட்டு, கடைசியில் நிற்கவும், நடக்கவும் சிரமமாக உணர்வார்கள்.
இரவு தூங்குவதற்கான சரியான வழி இதுதான்:
இரவில் நீங்கள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கினால் உங்களது செரிமான அமைப்பு மேம்படும் மற்றும் வயிற்றில் எந்தவித அழுத்தமும் ஏற்படாது. அதுவே நீங்கள் வலது பக்கமாக தூங்கினால் செரிமான செயல்முறையானது குறையும். இதனால் இரவில் நெஞ்செரிச்சல் பிரச்சனை வரும். எனவே இரவு நீங்கள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்குங்கள். அதுபோல இரவு இறுக்குமான ஆடைகளை அணிந்து தூங்க வேண்டாம். இல்லையெனில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாமல் போகும். முக்கியமாக, மென்மையான தலையணை வைத்து தூங்குங்கள்.
கழுத்து & தோள்களில் வலியை ஏற்படுத்தும்:
உயரமான தலையணை வைத்து தூங்கும் போது கழுத்து தோள்களில் அழுத்தம் ஏற்பட்டு விரைவில் வலியை உண்டாக்கும். இதன் காரணமாக இரவில் சரியாக தூங்க முடியாமல் போகும். அதாவது கழுத்து மற்றும் தோல் வழியால் இரவில் அடிக்கடி எழுந்திடுவோம். இதனால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் போகிவிடும்.
இதையும் படிங்க: ஒருநாள் தலையணை இல்லாமல் தூங்கி பாருங்க; எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?