நைட்டு சாப்பிடற பழக்கம் இல்லையா? இந்த '4' பிரச்சனைகள் வரலாம் ஜாக்கிரதை!!

First Published | Jan 6, 2025, 6:40 PM IST

Side Effects Of Skipping Dinner :  இரவு உணவு சாப்பிடாமல் இருந்தால் பல பிரச்சினைகள் வருவதற்கு காரணமாகும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். அவை என்ன என்பதை இங்கு காணலாம். 

Health risks of skipping dinner in tamil

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் நாம் சாப்பிடும் உணவு தான் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குகின்றது. சொல்லப் போனால் உணவு சாப்பிடுவதால் தான் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் முழுமையாக கிடைக்கிறது. அந்த வகையில், சிலர் இரவு உணவை சாப்பிடுவது தவிர்க்கிறார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். 

Side effects of skipping dinner in tamil

பொதுவாக நாம் சாப்பிடும் இரவு உணவு இலகுவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அதற்காக இரவு உணவை தவிர்க்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் சில சமயங்களில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு உணவு சாப்பிடுவதை அப்படியே நிறுத்தி விடுவார்கள். நீங்களும் இந்த தப்பை செய்தால் இனிமேல் இந்த பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் அது தவறு அதற்கு பதிலாக நீங்கள் இரவில் லேசான உணவை மட்டும் சாப்பிடுங்கள் பசியுடன் இருப்பது நல்லதல்ல. நீங்கள் இரவு உணவே தவிர்த்தால் உங்களது ஆரோக்கியம் பலவீனம் அடைவது மட்டுமின்றி உடல் நலம் தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், இரவு உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Not eating at night side effects in tamil

வயிற்று வலி:

சில சமயங்களில் சிலருக்கு இரவு உணவே தவிர்த்தால் வயிற்று வலி ஏற்படும். இரவு உணவு சாப்பிடாமல் இருந்தால் வயிறு வெறுமையாக இருப்பதால் வயிற்றில் வாயு உருவாக்கிவிடும். ஒருவேளை நீங்கள் உடலை குறைக்க இரவு உணவை தவிர்க்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை எளிதில் ஜீரணமாகி விடும் மற்றும் உங்களுக்கு பசி அதிகம் எடுக்காது. 

Skipping dinner side effects in tamil

தூக்கமின்மை பிரச்சனை வரும்:

தினமும் இரவு உணவு சாப்பிடாமல் தூங்கினால் இரவு உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. ஆம், நேரம் ஆக ஆக இரவு உங்களுக்கு பசி அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் இரவு தூங்கவே முடியாது. மேலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இதனால் சிலர் இரவு நேரத்தில் எதையாவது சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது உடல் நலம் தான் பாதிக்கப்படும். தூக்கமின்மை காரணமாக நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவே இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு எரிச்சலும், கோபமும் ஏற்படும். எனவே தூக்கமின்மை பிரச்சனையை தவிர்க்க இரவு சாப்பிடுவது தான் சிறந்த வழி.

இதையும் படிங்க:  உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்ப்பது நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

Health risks of skipping dinner in tamil

உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும்:

நீங்கள் தினசரி இரவு உணவை தவிர்த்து வந்தால் உங்களது உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக உங்கள் உடலானது கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைய தொடங்கும். நாளடைவில் நீங்கள் எப்போதுமே சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். உங்களது உடல் ரொம்பவே பலவீனமடைந்தால், உங்களது மன ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். அதாவது, இதன் காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் பதட்டம் மற்றும் கவலை ஏற்படும்.

இதையும் படிங்க: காலை உணவை ஏன் கண்டிப்பா சாப்பிடனும்? முக்கியமான '3' காரணங்கள்!!

Effects of not eating dinner in tamil

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்:

இரவு உணவை தவிர்த்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நீங்கள் தினமும் இரவு உணவே தவிர்த்து வந்தால் உங்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு அதிகமுள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையும். இதனால் நீங்கள் பல தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். 

Latest Videos

click me!