Non-Veg Food
அசைவ உணவு
முன்பெல்லாம் வீடுகளில் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் மட்டுமே மட்டன், சிக்கன், மீன் போன்ற அசைவம் எடுப்பார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு ஞாயிறுக்கிழமைகளும் நான்வெஜ் சாப்பிடாமல் நிறைவு பெறுவதில்லை. ஏனெனில் நான்வெஜ்களில் நமது உடலுக்கு தேவையான சத்துகள் இருப்பதும், நான்வெஜ்களுக்கு இணையாக காய்கறிகளின் விலையும் உச்சத்தில் இருப்பதே இதற்கு காரணம்.
இந்நிலையில், இந்தியாவில் அதிகம் நான்வெஜ் சாப்பிட்டும் முதல் 10 மாநிலங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
1.நாகாலாந்து
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நான்வெஜ் சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அதாவது நாகாலாந்தில் 99.8% மக்கள் நான்வெஜ் விரும்பி சாப்பிடுகின்றனர்.
2.கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் 99.3% பேர் நான்வெஜ் சாப்பிடுகின்றனர். மேற்கு வங்கம் மீன் குழம்பு மற்றும் மட்டன் கறிக்கு பேமஸ். கொல்கத்தா பிரியாணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
Fish Curry
3.கேரளா
நமது அண்டை மாநிலமான 'கடவுளின் தேசம்' என்றழைக்கப்படும் கேரளாவில் சுமார் 99.1% பேர் அசைவ பிரியர்கள். மீன் கறி, பீப் கறி கேரள மக்களின் பேவரிட் உணவாகும். மலபார் சிக்கன் பிரியாணியும் கேரள மக்களின் உணவுப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
4.ஆந்திர பிரதேசம்
நமது அண்டை மாநிலமான ஆந்திரா காரமான உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. ஆந்திராவில் 98.2% மக்கள் அசைவம் சாப்பிடுகின்றனர். கோழிக் கறி, மட்டன் பொரியல் மற்றும் பலவகையான கடல் உணவுகள் இம்மக்களின் மெனு லிஸ்ட்டில் உள்ளன.
பளு தூக்குதல் நல்லதா? இதை பண்ணா 'மாரடைப்பு' வருமா?
Briyani
5.தமிழ்நாடு
பாரம்பரிய உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற நமது தமிழ்நாட்டில் சுமார் 97.65% பேர் அசைவ உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். மட்டன், சிக்கன், மீன் என எதையும் நாம் விட்டு வைப்பதில்லை. தமிழர்களுக்கு சிக்கன், மட்டன் பிரியாணி எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
6.ஒடிசா
கடலோர மாநிலமான ஒடிசாவில் ஏராளமான மக்கள் நான்வெஜ் பிரியர்கள். வாரத்துக்கு இரண்டு முறையாவது மீன் சாப்பிடாமல் ஓடிசா மக்களின் நாட்கள் கழிவதில்லை. ஆட்டிறைச்சிக்கும் அங்கு ஓர் இடம் உண்டு.
7. திரிபுரா
நாட்டின் மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 95% மக்கள் நான்வெஜ் உணவு விரும்பிகளாக உள்ளனர்.
NonVeg Eat States
8. கோவா
உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவாவில் 93.8% மக்கள் அசைவ உணவு சாப்பிடுகின்றனர். கோவா மீன் கறி ஆல்டைம் பேவரிட். மேலும் சிக்கன், பன்றி இறைச்சியையும் கோவா மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
9.ஜார்க்கண்ட்
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட்டில் 97% மக்கள் இறைச்சி சாப்பிடுகின்றனர். மீன் மற்றும் சிக்கன் அவர்களின் விருப்ப பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
10. தெலங்கானா
தெலங்கானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 97% பேர் அசைவ உணவு பிரியர்களாக இருக்கின்றனர். சிக்கன், எருமை இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை விரும்பி உண்கின்றனர்.
குழந்தையை ஒழுக்கமா வளர்க்கிறோம்ங்கற பேர்ல பெற்றோர் செய்யும் '5' தவறுகள்!!