
பொதுவாக எல்லோருக்கும் வறண்ட சருமம் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு தான் இருக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக வறண்ட சரும பிரச்சனை மேலும் அதிகரிக்கும். எப்படியெனில், குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்றானது சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கிவிடுகிறது. இதனால் சருமம் கரடு முரடாகவும், இறுக்கமாகவும் மாறிவிடுகிறது.
குறிப்பாக சருமத்தில் போதுமான அளவு ஈரம் இல்லாததால் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். இதை தடுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே, வறண்டு சிரமம் உள்ளவர்கள் உங்களது தோலின் வகைக்கு ஏற்ப இருக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அதனால் ஆண்டு முழுவதும் உங்கள் சருமம் மென்மையாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், வறண்ட சருமம் உள்ளவர்கள் சரும பராமரிப்பில் செய்யக்கூடாத சில தவறுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சருமம் வறண்டு இருக்கிறதா..? இந்த அஞ்சுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க..மென்மையாக மாறும்!
முகத்தை அடிக்கடி கழுவாதே!
இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. வருட சருமம் உள்ளவர்கள் தண்ணீரில் அடிக்கடி தங்களது முகத்தை கழுவினால் சருமம் இன்னும் மோசமாகும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உங்களது முகத்தை தண்ணீரால் கழுவினால் போதும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சூடான நீரில் குளிக்காதே..
குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பது கதகதப்பாக இருந்தாலும், உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் சூடான நீரில் குளிப்பது நல்லதல்ல. ஏனெனில் நீங்கள் சூடான நீரில் குளிக்கும் போது உங்கள் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெயானது அகன்று விடும். வேண்டுமானால் நீங்கள் சூடான நீரை ஆறவைத்து குளிக்கலாம்..
இதையும் படிங்க: Beauty tips for Face: உலர்ந்த சருமமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!!
அடிக்கடி எக்ஸ்ஃபோலியேட் செய்யாதே..
ஆம், நீங்கள் கேட்பது உண்மைதான். வறண்ட சருமம் உள்ளவர்கள் அடிக்கடி எக்ஸ்ஃபோலியேட் செய்யக்கூடாது. இல்லையெனில் உங்கள் சருமம் மேலும் மோசமாக வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எக்ஸ்ஃபோலியேட் நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சன் ஸ்கிரீன் பயன்படுத்தாதே!
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தாலும் இல்லாவிட்டாலோ நீங்கள் சன் ஸ்கிரீன் அதிகம் பயன்படுத்த வேண்டாம். வேண்டுமானால் நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். ஏனெனில் சில சன் ஸ்கிரீன்களில் துத்தநாக ஆக்சைடு உள்ளதால், இது சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணையை நீக்கிவிடும் இதனால் சருமம் சீக்கிரமாகவே வறட்சியாகிவிடும்.
நினைவில் கொள்:
- நீங்கள் குளித்துவிட்டு வந்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால் அது நன்றாக உறிஞ்சப்படுகிறது. மேலும் அதனால் உங்கள் சருமம் நீரேற்றமாகவும் இருக்க உதவுகிறது. உங்கள் சருமம் ஈரப்பதமாக இருந்தால் வறட்சி ஏற்படாது.
- வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் லோஷன் அல்லது மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்றாலும், நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதை பயன்படுத்துகிறீர்களா என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- எல்லாவற்றையும் விட, சருமம் வறண்டு போவதை தடுக்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். உண்மையில் சரும பராமரிப்புக்கு நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். போதுமானளவு தண்ணீர் குடிக்காததால் தான் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஈரப்பதம் இல்லாமல் போகிறது. இது தவிர வெள்ளரி, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்