
பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். சொல்லப்போனால் இது எல்லார் வீட்டின் சமையலறையிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு மூலிகையாகும். பூண்டு அதன் நறுமணம் மற்றும் சுவைக்காக பெயர் பெற்றது. மேலும் பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. இதனால் தான் இன்றும் பல மருத்துவத்திற்காக இது பயன்படுத்தப்படுகின்றது.
இதன் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பூண்டை நீங்கள் இரவு தூங்கும் முன் உங்களது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இரவு நிம்மதியாக தூங்க உதவும் தெரியுமா? பொதுவாக நிதி பலன்களை பெறுவதற்காக தான் இந்து மதத்தில் தூங்கு முன் தலையணுக்கு அடியில் இது போன்ற பல பொருட்களை வைத்து தூங்கும் வரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல தான் பூண்டும். ஆனால் சற்று வித்தியாசமானது. ஆம், இதில் இருக்கும் துத்தநாகம், கந்தகம் உங்களது தூக்கமின்மை, சோர்வு, உடலில் துத்தநாகக் குறைபாடு மற்றும் கனவுகளை விரட்ட உதவுகிறது. இப்போது பூண்டை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: பூண்டில் மருத்துவ குணம் இருந்தாலும் இந்த '7' பேர் சாப்பிடக் கூடாது!! மீறினால் என்னாகும் தெரியுமா?
நல்ல தூக்கம் கிடைக்கும்:
தற்போது பலர் தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகிறார்கள். இதனால் பல நோய்களுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். மேலும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களது மொத்த ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். இது தவிர, இரவில் அடிக்கடி எழுந்திருப்பவர்களுக்கு பலர் இருக்கிறார்கள். எனவே இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், இந்த பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் 1-2 பூண்டை உரித்து வைத்து தூங்கினால் அதிலிருந்து வரும் ஜிங் வாசனை நன்றாக தூங்க உதவும்.
இதையும் படிங்க: முளைவிட்ட பூண்டை சாப்பிடலாமா? பூண்டு ஏன் முளைக்குது தெரியுமா?
பருவகால நோய்கள் வருவதை தடுக்கும்:
பூண்டில் வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது மேலும் இதில் இருக்கும் காரமான வாசனை நம்முடைய உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே தூங்குவோம் தலையணைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் சளி இருமல் போன்ற பருவ கால நோய்கள் வருவதை தடுக்கும்.
கொசுக்கள் பூச்சிகள் வருவதை தடுக்கும்:
இரவில் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும் இதனால் தூக்கம் கெட்டுப் போகும். மேலும் மறுநாள் சோர்வாக இருப்பீர்கள். எனவே இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் பூண்டு வைத்து தூங்கினால் கொசுக்கள், பூச்சிகளின் தொல்லை இருக்கவே இருக்காது. ஏனெனில் பூண்டில் இருக்கும் கடுமையான வாசனை கொசுக்கள் மற்றும் பூச்சிகளுக்கு பிடிக்காது. இதனால் நாம் நிம்மதியாக இரவு தூங்க முடியும்.
கெட்ட கனவுகள் வராது:
இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இரவு தலையணைக்கடியில் பூண்டு வைத்து தூங்கினால் உங்களுக்கு கெட்ட கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் பூண்டில் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் திறன் இருப்பதாக சொல்லுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தலையணைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் நேர்மறை ஆற்றல் உங்களை சுற்றி இருக்கும். இதனால் கெட்ட கனவுகள், கவலை, பயம் ஏதும் உங்களுக்கு வராது. முக்கியமாக நீங்கள் தூக்கத்தில் இருந்து அடிக்கடி எழவும் மாட்டீர்கள்.