சிங்கப்பூர் ஆண்களை போலி திருமணம் செய்யும் வெளிநாட்டு பெண்கள்; அதிகரிக்கும் sham marriages; என்ன காரணம்?

Published : Jan 07, 2025, 01:13 PM IST

சிங்கப்பூரில் sham marriages எனப்படும் போலி திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம். 

PREV
14
சிங்கப்பூர் ஆண்களை போலி திருமணம் செய்யும் வெளிநாட்டு பெண்கள்; அதிகரிக்கும் sham marriages; என்ன காரணம்?
Sham Marriages

போலி திருமணங்கள் (sham marriages)

உலகின் ஹெடெக் நாடான சிங்கப்பூரில் இந்தியர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் sham marriages என அழைக்கப்படும் போலி திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு கடந்த 9 மாதங்களில் 32 போலி திருமணங்கள் நடைபெற்றுள்ளது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

சிங்கப்பூரில் வேலைக்காக, படிப்புக்காக செல்லும் வெளிநாட்டு பெண்கள் சிங்கப்பூரின் குடியுரிமை பெறுவதற்காக சிங்கப்பூர் ஆண்களை போலியாக திருமணம் செய்வதே  sham marriages ஆகும். வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் சிங்கப்பூர் குடியுரிமை எளிதாக கிடைக்கும்; இதன்மூலம் அந்த நாட்டில் நீண்ட காலம் தடையின்றி தங்கி இருக்கலாம்.

 

24
Sham Marriages in Singapore

ஒரு கும்பலே செயல்படுகிறது

இதனால் குறுக்கு வழியை பயன்படுத்தும் வெளிநாட்டு பெண்கள், சிங்கப்பூர் ஆண்களுக்கு பணம் கொடுத்து போலியாக திருமணம் செய்து கொள்கின்றனர். நாங்கள் இருவரும் கணவன் மனைவி என அரசுக்கு ஆவணங்களை காட்டவே இந்த போலி திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த திருமணம் தொடர்பான ஆவணங்கள் அதிகாரிகளிடம் சென்றபிறகு, போலி திருமணம் செய்தவர்கள் நீ யாரோ, நான் யாரோ என்று அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.

இப்படி வெளிநாட்டு பெண்களுக்கும், சிங்கப்பூர் ஆண்களுக்கும் போலியாக திருமணம் செய்து வைக்க ஒரு கும்பல் இயங்கி வருகிறது. இடைத்தரர்களாக செயல்படும் இந்த கும்பல் சிங்கப்பூர் ஆண்களுக்கு பணத்தாசை காட்டி போலி திருமணங்களுக்கு சம்மதிக்க வைக்கின்றனர். இப்படி போலியாக திருமணம் செய்தவர்கள் பின்பு குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் ஆய்வின்போது மாட்டிக் கொள்கின்றனர். 

நான்வெஜ் அதிகம் சாப்பிடும் டாப் 10 மாநிலங்கள்; தமிழ்நாட்டில் இத்தனை பேர் அசைவம் சாப்பிடுறாங்களா?

 

34
What is the reason for Sham Marriages

அதிகாரிகளிடம் சிக்கினர் 

தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின்படி சிங்கப்பூரில் வசிக்கும் 33 வயதான ஒரு நபர் வியட்நாமிய பெண்ணை போலி திருமணம் செய்து கொண்டார். புக்கிட் பாடோக் குடியிருப்பில் வசிக்கும் அந்த நபர், போலி திருமனம் செய்ததை அதிகரிகள் இப்போது தான் கண்டுபிடித்துள்ளனர். இது போலி திருமணம் என தெரியவந்ததால் அதிகாரிகள் அவரது குடியிருப்பில் சோதனை நடத்தினார்கள். 

அந்த நபரின் அறையில் திருமணமான தம்பதிகள் வசித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அறையில் பெண்களுக்கான ஆடைகள் எதுவும் இல்லை. மேலும் அவரது தாயார் தனது மகனுக்குத் திருமணம் ஆனது தெரியாது என்று சொன்னது அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபரையும், அவரை போலி திருமணம் செய்த பெண்ணையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

44
Singapore

வியட்நாம் நாட்டு பெண்கள் அதிகம் 

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மட்டும் 32 போலி திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 2023ம் ஆண்டு நான்கு போலி திருமணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் ஆண்களை போலியாக திருமணம் செய்யும் வெளிநாட்டு பெண்களில் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சிங்கப்பூரில் போலித் திருமணம் பதிவுசெய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா.. பிரதமர் ரேஸில் இந்திய வம்சாவளி.. யார் இந்த அனிதா ஆனந்த்?

Read more Photos on
click me!

Recommended Stories